வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பஞ்சமி நிலத்தை கைபற்றிய பன்னீரு அரசியலைவிட்டு விலக வேண்டும். பெரிய கேவலமா இருக்கு.
சென்னை:தேனியில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வாங்கியது பஞ்சமி நிலம் என்பது உறுதியானதால், தமிழ்நாடு மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையம், அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.கடந்த 1991ல், தேனி மாவட்டம் ராஜாகளம் என்ற இடத்தில், 40 சென்ட் பஞ்சமி நிலத்தை, மூக்கன் என்பவருக்கு தமிழக அரசு வழங்கியது. அரசிடம் இருந்து பஞ்சமி நிலத்தை பெறும் பட்டியலினத்தவர், 15 ஆண்டுகளுக்கு நிலத்தை வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்ய முடியாது என்பது விதி. அதன்பிறகும், நிலத்தை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே விற்க முடியும். விதிமீறல்
ஆனால், தனக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை, பட்டியலினத்தைச் சாராத ஹரிசங்கர் என்பவருக்கு, 2008ல் மூக்கன் எழுதிக் கொடுத்துள்ளார். ஹரிசங்கரிடம் இருந்து அந்த நிலத்தை வாங்கிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தன் பெயரில் பட்டா வாங்கியுள்ளார்.பஞ்சமி நிலத்திற்கான சட்டத்தை மீறி, பட்டியலினத்தை சாராத பன்னீர்செல்வத்தின் பெயரில் பத்திரப்பதிவு செய்து, பட்டா கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மூக்கனின் மகன்கள் பாலகிருஷ்ணன், முத்துமணி ஆகியோர், மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.இதை விசாரித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவு:பன்னீர்செல்வம், தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, பஞ்சமி நிலத்திற்கு பட்டா பெற்றுள்ளார் என்பதை மறுக்க முடியாது.  நடவடிக்கை
அதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, அந்த நிலத்திற்கு அவர் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை, சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் ரத்து செய்ய வேண்டும். சட்டத்தை மீறி நிலத்தை மாற்றிக் கொடுத்த தாசில்தார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் மீது, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த நிலத்தையும் வாங்குவோர் விழிப்புடன் இருக்க வேண்டும். தாய் பத்திரங்களை முழுமையாக பரிசோதித்து உறுதிப்படுத்திய பின்னரே, பத்திரப்பதிவு செய்ய வேண்டும். பஞ்சமி நிலங்களை முறையற்ற வகையில், பட்டா மாற்றம் செய்ய வரும் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம் என, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு, அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சமி நிலத்தை கைபற்றிய பன்னீரு அரசியலைவிட்டு விலக வேண்டும். பெரிய கேவலமா இருக்கு.