உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கம்யூனிஸ்ட் கட்சிகள் 2 சீட்டுக்காக மவுனம்; செல்லுார் ராஜூ கிண்டல்

கம்யூனிஸ்ட் கட்சிகள் 2 சீட்டுக்காக மவுனம்; செல்லுார் ராஜூ கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: சிவகங்கையில் போலீஸ் விசாரணையின் போதுஇளைஞர் உயிரிழந்த விவகாரத்திற்கு குரல் கொடுக்காமல் தேர்தலில் 2 சீட்டுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் மவுனமாக இருப்பதாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.அ.ம.மு.க.,வில் இருந்து மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ வரவேற்றார். செல்லுார் ராஜூ கூறியதாவது: அ.தி.மு.க.,வில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவது காலம் காலமாக நடக்கும் ஒன்று. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றியை உறுதி செய்ய பிரிந்து சென்றவர்கள் தற்போது இணைந்துள்ளனர்.தி.மு.க., ஓரணியில் தமிழகம்' என்று மக்களிடம் எந்த சாதனையை கூறுவர். அ.தி.மு.க.,வின் 10 ஆண்டுகால ஆட்சியில் மதுரைக்கு பல சாதனைகள் செய்துள்ளோம். பொதுமக்களுக்கு ரூ.1000 கொடுத்தால் போதுமா. மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவில்லை. இதன் ரிசல்ட் பூஜ்ஜியம் தான். சட்டசபை தேர்தலை மனதில் வைத்து மகளிர் உரிமைத் தொகையில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சியில் இதுவரை இல்லாத வகையில் ஊழல் நடந்துள்ளது. துாய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கி, நிரந்தர துாய்மைப் பணியாளர்கள் 800 பேருக்கு மாநகராட்சி சார்பில் ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் ரூ.1 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிக்கப்பட்டு தற்போது வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் சாத்தான்குளத்தில் நடந்த போலீஸ் விசாரணை மரணத்தை விட கொடுமையான சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது. தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மக்கள் நலன் முக்கியம் இல்லை. இந்நேரம் களத்தில் நின்று போராடியிருக்க வேண்டும்.ஆனால் தேர்தலில் 2 சீட்டுக்காக காத்திருக்கின்றனர். இந்த கூட்டணி மவுனத்திற்கு சரியான பதிலடியை மக்கள் தேர்தலில் வழங்குவர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பேசும் தமிழன்
ஜூலை 03, 2025 19:28

அட நீங்க வேற.... இரண்டு சீட்டு எதற்கு..... அவர்கள் உண்டியலில் கொஞ்சம் காசு போட்டாலே போதும்.... வாயே திறக்க மாட்டார்கள்..... அந்தளவுக்கு நல்லவர்கள்


ram
ஜூலை 03, 2025 17:41

செல்லூர் ராஜீ வா.. உன்னை மறக்க முடியுமா... அப்படி உன் செயல் .. நியாபகம் இருக்கா.. தண்ணீர்... தெர்மோகூழ்.... மறக்கக் கூடிய விஷயமா இது...


V. SRINIVASAN
ஜூலை 03, 2025 14:17

இவர் தானே தெர்மோகோல் ராஜூ மதுரையில் வெள்ளம் வந்த பொது தண்ணீரில் தெர்மோகோல் விட்ட ராஜூ


ram
ஜூலை 03, 2025 17:42

ஸ்ரீஅதே பேனா பக்கிரிதானே... தூக்கிலே தொங்கி இருக்கனும் அந்த சம்பவத்துக்கு பிறகு... மானம் கெட்ட கூட்டம் தானே...


SJRR
ஜூலை 03, 2025 12:48

திமுகவில் இருக்கும் அனைத்து கூட்டணி கட்சிகளும் அப்படித்தான். கிடைத்ததை வாங்கிக்கொண்டு அவர்களுக்காக மீடியா முன்பு கத்திக்கொண்டு இருப்பார்கள்.


M Ramachandran
ஜூலை 03, 2025 11:48

வேறு என்ன செய்ய முடியும்?


D.Soundarrajan, Madurai
ஜூலை 03, 2025 09:23

2 or 1 they are winning in elections. in democracy, Victor's claim all credit sellu raju can't understand that logic


சின்னசேலம் சிங்காரம்
ஜூலை 03, 2025 09:17

அவர் சொல்வது உண்மைதான். மக்கள் நலன் கருதி கம்யூனிஸ்டுகள் போராடி பலகாலம் ஆகிவிட்டது


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 03, 2025 12:28

உலகில் தகரம் கண்டுபிடித்த அன்றே உண்டியல் கண்டுபிடித்த விஞானிகள் கம்னியூஸ்ட் கட்சியினர்


Palanisamy Sekar
ஜூலை 03, 2025 09:17

அப்பாடா வீதிக்கு இப்போதுதான் வந்திருக்கார் மனுஷன் பதினேழு கோடி காணாமல் போனதால் எவ்வளவு துடி துடித்திருப்பார். இப்போதுதான் மூச்சு விடுகின்றார். அதனாலேயே கேலி கிண்டல் வருகின்றது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் பங்காளி உறவுமுறை கொண்டாடுகின்ற இவர்கள் வெளியே மட்டும்தான் தனி தனி. மறைமுகமாக தேர்தல் ஒப்பந்தம் நீ ஜெயிச்சா மாசம் மாசம் இவ்ளோ கமிஷன். நான் ஜெயித்தால் இவ்ளோ என்று ஒருவித புரிதலோடு பேட்டியில் கேலி கிண்டல் தொனிக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை