விபத்தை ஏற்படுத்துவோரின் சம்பளத்திலிருந்து இழப்பீடு வசூலிப்பு: அரசு வாகன டிரைவர்கள் புலம்பல் அரசு வாகன ஓட்டுனர்கள் புலம்பல்
அரசு வாகனங்கள் விபத்திற்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க, தங்கள் சம்பளத்தில் இருந்து வசூ லிக்கப்படுவதாக டிரைவர் கள் புலம்புகின்றனர். மதுரை அருகே சிவகங்கை மாவட்ட எல்லை யான சக்குடியில், இரு நாட் களுக்கு முன் டூ - வீலர் மீது போலீஸ் சுமோ கார் மோதியதில் கணவன், மனைவி, மகன் பலியாகினர். இந்த சம்பவத்தில், இரு நாட்களாக உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் உடல்களை பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., சங்கீதா நடத்திய பேச்சு தோல்வி அடைந்ததால், போராட்டம் நடத்தியவர் கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, அரசு வாகனங்கள் விபத்திற்குள்ளாகி உயிரிழப்பை ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரண தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. இழப்பீடு கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்லும் போது, அரசு தரப்பில் தருவதாக உறுதி அளிக்கப்பட்டு, அந்த தொகையை தங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்வதாக, அரசு வாகன டிரைவர்கள் புலம்புகின்றனர். அவர்கள் கூறியதாவது: போலீஸ் வாகனம் உட்பட எந்த அரசு துறை வாகனங்களுக்கும், இன்சூரன்ஸ் செய்வது கிடையாது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தர, நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில், எங்கள் மீது தான் தவறு என்ற அடிப்படையில், எங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து, அரசு இழப்பீடு தருகிறது. இது, காலம் காலமாக இருக்கும் நடைமுறை. வாகனங்களை முறையாக பராமரித்தாலே விபத்தை தவிர்க்க முடியும். ஆனால், அரசு பணிமனைக்கு சென்று, திரும்ப பெறுவதற்குள்ளும், பராமரித்ததற்கான செலவை அரசுக்கு எழுதி பெறுவதற்குள்ளும் வெறுத்து போய்விடும். இதனாலேயே, தனியார் ஒர்க் ஷாப்பில், 'மைனர்' பழுதுகளை மட்டும் பார்த்து சமாளித்து வருகிறோம். அதேபோல, தமிழகத்தில் அரசு பஸ்கள், அதிகாரிகளின் வாகனங்கள் உட்பட செப்., 30ம் தேதியுடன் தகுதி சான்று முடிந்த 12,000 அரசு வாகனங்களுக்கு, மேலும் ஓராண்டிற்கு தகுதியை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். -நமது நிருபர்-: