உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்றாலை, சூரிய மின்சாரம் வாங்க மறுத்தால் இழப்பீடு

காற்றாலை, சூரிய மின்சாரம் வாங்க மறுத்தால் இழப்பீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, சாதகமான சூழல் நிலவு கிறது. இதனால், தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.இயற்கையில் கிடைக்கும் இரு வகை மின்சாரமும் சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. இதனால், தினசரி மின் தேவையை பூர்த்தி செய்வதில், காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும்படி, மாநில மின் வாரியங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதற்கு ஏற்ப இரு வகை மின்சாரத்தையும், தமிழக மின் வாரியம் பயன்படுத்துகிறது. தற்போது காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை, மின் வாரியம் முழுவதுமாக வாங்குவதை கட்டாயமாக்கியும், வாங்க மறுத்தால் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் விதிமுறைகளை வெளியிடவும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்து உள்ளது.மின் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும் போது மட்டும், மின்சாரம் வாங்குவதை தவிர்க்கலாம். இதற்கான வரைவு அறிக்கை, ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் மீது பொது மக்கள், 29ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை