உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகை கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின்; சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு

நடிகை கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின்; சென்னை எழும்பூர் கோர்ட் உத்தரவு

சென்னை: தெலுங்கர் குறித்து அவதுாறாக பேசியதாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 3ம் தேதி, சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்துாரி, தெலுங்கர் குறித்து சர்ச்சையான கருத்துகளை பேசினார். இதனால், அவர் மீது கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து, ஹைதராபாத்தில் இருந்த கஸ்துாரியை கைது செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கஸ்துாரிக்கு ஜாமின் வழங்கக் கேட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதி தயாளன்முன் விசாரணைக்கு வந்தது. கஸ்துாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 'கஸ்துாரிக்கு, 12 வயதில், ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மகன் உள்ளார். அவரை கவனித்துக் கொள்ள வேறு நபர்கள் இல்லாததால், உடனே ஜாமின் வழங்க வேண்டும்' என, வாதிட்டனர். இதற்கு போலீஸ் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து, கஸ்துாரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதி மனைவிவேண்டுகோள்:

முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மனைவியும், மாற்றுத்திறனாளிகளுக்கான, 'சக் ஷம்' என்ற அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவருமான காமாட்சி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: நடிகை கஸ்துாரிக்கு 'ஆட்டிசம்' பாதிப்போடு ஒரு மகன் உள்ளார் என்றும்,அவர் ஒரு தனி மனுஷியாகஅக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார்என்பதையும் அறிந்து கொண்டேன்.இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும், அவர்தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே, ஒரு நித்திய சவால். நானும் கஸ்துாரியை போல ஒரு சிறப்பு அம்மா தான். எனக்கும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான்.அதனால், கஸ்துாரி விஷயத்தில் வேண்டுகோள் விடுக்க தோன்றுகிறது. ஜாமின் விஷயத்தில், நீதிமன்றங்கள் குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.ஒரு மாற்றுத்திறனாளியின் தாயாக, கஸ்துாரிக்கு என் உடன் நிற்றலையும் தார்மீகக் கடமையாக நினைக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Naga Subramanian
நவ 21, 2024 18:25

தேடப்படும் மிக கொடும் தண்டனை குற்றவாளியைப் போல, வெளி மாநிலம் வரை சென்று, ஒரு பெண்மணியை கைது செய்யத் தெரிந்த போலீசுக்கு, அணில் பாலாஜியின் தம்பி, மறைந்து வாழும் அசோக்கை, ஏன் தேட முடியவில்லை?


C G MAGESH
நவ 21, 2024 12:45

ஒரு வருடத்துக்கு மேலாகியும், பத்து ருபாய் பாலாஜியின் தம்பியை கண்டு பிடிக்க முடியல.


vbs manian
நவ 21, 2024 10:53

நீதி காவல் நம்பிக்கை குறைந்து வருகிறது. சீர்திருத்தம் என்று நிறைய பேர் நிறைய பேசுகிறார்கள். நடைமுறையில் ஒன்றும் காணோம்.


தஞ்சை மன்னர்
நவ 21, 2024 10:49

அப்படிபட்ட அந்த பையனை வீட்டில் விட்டு தானே இந்த அம்மா மைக் கிடைத்தவுடன் பேச போகிறது அப்போது இந்த கருணை வேலை செய்யவில்லை போல கேள்வி யில் நியாயம் இருக்க இல்லயா, அப்படிஉள்ள இந்த அம்மா மாதம் பாத்து மீட்டிங்க எப்படி அட்டண்ட் பண்ணுது


vbs manian
நவ 21, 2024 09:35

உங்கள் குழந்தை முக்கியம் .யாரும் வர மாட்டார்கள்.


vbs manian
நவ 21, 2024 09:09

இந்த அவல நிலை மாற வேண்டுமென்றால் மக்கள் கையில் உள்ள வோட்டு ஒன்றுதான் வழி. மோட்சமும் நரகமும் அவர்கள் கையில் உள்ளது.


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 10:41

இதில் என்ன அவலநிலை கண்டீர்கள். நடிப்புத் தொழில் இருக்கிறது. கணவன் இல்லாமல் மாற்றுத்திறனாளிக் குழந்தையும் இருக்கிற நிலையில் பொறுப்புடன் பேச வேண்டாமா? பிராமணர் மாநாட்டில் பிராமணர் பற்றி உயர்த்தி மட்டும் பேசிட்டு போயிருக்கலாம், பிற இனத்தவரை தாழ்த்திப் பேசி என்ன கண்டார்? ஒளிந்து ஓட்டம், யார் வீட்டிலோ தலைமறைவு, கைது, ஜெயிலில் 3 நாள், இவை தான்.


VENKATASUBRAMANIAN
நவ 21, 2024 07:51

தனிப்படை என்ன சாதித்து விட்டது. கேவலமாக இல்லை. வேங்கை வயல் பிரச்சினை யில் இன்னும் யாரையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. பேரு ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் போல். காவல்துறை இவ்வளவு கேவலமாக போய்விட்டது


Kanns
நவ 21, 2024 07:17

Shameful Justice. Sack-Arrest-Prosecute-Punish All Vested& CaseHungry 95% Judges Biasedly Denying Anticipatory Bails Not Punishing VestedFalseComplainant Gangs women, groups/ unions/Parties, SCs, advocates etc, Power-Misusing Ruling Party-Allies& their Stooge Officials esp Police Judges etc


புதிய வீடியோ