| ADDED : மார் 12, 2024 12:55 AM
நாட்டின் பன்முகத்தன்மை, மதச்சார்பின்மையை அழிப்பது, நாட்டை ஹிந்து ராஜ்யமாக அறிவிக்க வேண்டும் என்பது தான் பா,ஜ., வின் நோக்கம். தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை.இந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது. மத்திய பா.ஜ., அரசு, மாநில உரிமைகளை மதிக்காத அரசாக உள்ளது. வரிவிதிப்பில் தமிழகத்திற்கு பாராபட்சம் காட்டுகிறது. மாநில உரிமைகளை காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த ஆட்சிக்கு மாற்று அரசாக இண்டியா கூட்டணி வர வேண்டும்.பா.ஜ.,வை ஹிந்தி, ஹிந்துத்துவா கட்சியாகவே பார்க்கிறேன். பொய் பிரசாரம் செய்வதில் பிரதமர் மோடி வல்லவர். ஹிந்து மதத்தின் நம்பிக்கைக்கு, காங்கிரஸ் எதிரி இல்லை. அரசின் செயல் மதத்தை சார்ந்து இருக்கக்கூடாது.தனி மனிதருக்கு இறை நம்பிக்கை இருக்கக்கூடாது என, காங்கிரஸ் சொல்லவில்லை. நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மத்திய தேர்தல் பணிக்குழு முடிவு செய்யும். - கார்த்தி சிதம்பரம்,காங்கிரஸ் - எம்.பி.,