உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோடி வருகைக்கு எதிர்ப்பு காங்., கருப்புக்கொடி திட்டம்

மோடி வருகைக்கு எதிர்ப்பு காங்., கருப்புக்கொடி திட்டம்

சென்னை:'பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து, ராமேஸ்வரம் பாம்பன் கடலில் இறங்கி, மனித சங்கிலி போராட்டம்; குலசேகரபட்டினத்தில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்' என, தமிழக காங்கிரஸ் கட்சிஅறிவித்துள்ளது.அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில், 'பாரம்பரியமாக பங்கேற்கும் கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவை புறக்கணிக்கிறோம். இன்று முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம்' என, ராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. ராமேஸ்வரம் மீனவர்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருக்கும் போராட்டத்திற்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.மத்திய அரசு மற்றும் இலங்கை அரசின், மீனவர்கள் விரோதப் போக்கை கண்டித்து, பிப்., 27ல், ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி, மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். பிப்., 28ல், துாத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை