உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களுக்கு ரூ.1 லட்சம் - தமிழகத்திலும் தருவதாக காங்., உறுதிமொழி: வீடியோ வைரல்

பெண்களுக்கு ரூ.1 லட்சம் - தமிழகத்திலும் தருவதாக காங்., உறுதிமொழி: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தருவதாக தமிழகத்திலும் உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிப்பதாக காங்கிரசார் ஓட்டு வேட்டை நடத்திய வீடியோ வைரலாகியுள்ளது. தமிழகத்தில் காங்., போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வென்றும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.லோக்சபா தேர்தலில் வெற்றிப்பெற்றால் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்குடும்ப தலைவிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதனை முன்னிலைப்படுத்தி நாடு முழுவதும் பிரசாரமும் செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eo6aswz4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாக கூறி, வீடு வீடாக காங்கிரசாரும் உத்தரவாத பிரசுரங்கள் வழங்கி இருந்தனர். தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 234 இடங்களில் வென்றது. காங்கிரஸ் மட்டும் 99 இடங்களை பெற்றன. இதனால் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தபடி ஏழை குடும்ப தலைவிக்கு ரூ.1 லட்சம் தர வேண்டும் என வலியுறுத்தி உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பெண்கள் உத்தரவாத பிரசுரங்களுடன் காங்கிரஸ் அலுவலகத்திற்கு படையெடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழகத்திலும் மக்களிடம் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை உத்தரவாத பத்திரமாக அளிப்பதாக கூறி காங்கிரசார் ஓட்டுப்பெற்ற வீடியோ வைரலாகியுள்ளது.

உத்தரவாத பத்திரம்

வீடியோவில் பெண்மணி ஒருவரிடம் காங்கிரசார், 'வெற்றி பெற்றால், ஒரு லட்சம் ஊதியத்துடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி, மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை அளிப்போம், விவசாய கடன்கள் தள்ளுபடி, தினக்கூலியை ரூ.400 ஆக உயர்த்துவோம். இதனை உத்தரவாத பத்திரமாக எழுதி ராகுல், மல்லிகார்ஜூன கார்கே கையெழுத்துப்போட்ட பத்திரத்தை இளைஞர் காங்கிரசில் இருந்து தருகிறோம்' எனக் கூறி அப்பெண்மணியிடம் பெயர், விலாசத்தை கேட்டு எழுதுகின்றனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டு தருவதாக கூறி, கவர்ச்சி அறிவிப்புகளுடன் கூடிய வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பெண்களிடம் அளித்து, ஓட்டு பெற்று வென்றதால், இப்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு சிலர் காங்கிரசாரிடம் கேட்டு வருகின்றனர். தமிழகத்தில் காங்., போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வென்றும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

Rahulakumar Subramaniam
ஜூன் 13, 2024 16:09

இப்படி ஆன உறுதிமொழிகளை வழங்குவது விதிகளை மீறிய செயல் ஆகாதா ? விசாரணை கமிஷன் வேண்டும் .


Anbuselvan
ஜூன் 10, 2024 23:42

மானங்கெட்ட பொழப்புன்னு சொல்ல மாட்டாங்களா இப்போ. சொன்னா என்ன இப்போ, அதுதான் வெற்றி அடைஞ்சாச்சே. இனி ஆப்புதான். அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மக்கள் இதையும் மறந்து விடுவர் என்கிற நினைப்புதான் இவர்களை இன்னமும் மக்கள் முன்பு நடமாட வைத்து கொண்டு இருக்கிறது.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 10, 2024 16:15

சொத்துக்களை விற்றால் இது சாத்தியமே


Harindra Prasad R
ஜூன் 08, 2024 15:07

என்ன உத்திரவாதம் கொஞ்சம் காட்டுங்க .....


Chinnathambi venka
ஜூன் 08, 2024 14:58

தமிழ் நாட்டை தாண்டதவர்கள் கிணற்றுத் Thavalaikal


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 07, 2024 22:17

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டு தான் இருப்பார்கள். அவன் சொன்னான் என்றல் இந்த பிட்சை காரர்களுக்கு புத்தி எங்கே போயிற்று?


Senthil
ஜூன் 07, 2024 21:13

காங்கிரஸ் பணத்தில் அல்லது காங்கிரஸ் சொத்தை விற்றோ கொடுக்கலாம் , மக்கள் வரி பண கஜானாவை தொட கூடாது


Senthil
ஜூன் 07, 2024 21:11

குடுத்தால் மொத்த இந்தியாவும் திவாலாகி விடும் , எல்லா இந்தியா மக்களும் ரோட்டுக்கு வந்து விட வேண்டும்


Ravichandran S
ஜூன் 09, 2024 11:19

பாகிஸ்தானில் பெட்ரோல் 50 ரூபாய் லங்காவில் 40 ரூபாய்னு சொல்லிக்கிட்டு இருந்தானுங்க இதே மாதிரி இங்கயும் பண்ணியிருந்தா திவால் தான். அடுத்து இது போல எல்லா இலவசம் சொல்லிட்டு காலி பண்ணிட்டு வெள்ளை அறிக்கையில் ஒரு நபருக்க 3 கோடி கடன். னு சொல்லி குளோஸ் பண்ணிடுவாங்க ஆனா வாங்கினது என்னமமா 10000 ரூபாய் இருக்கும் கடனோ லட்சக்களுக்கு


Parthasarathy Badrinarayanan
ஜூன் 07, 2024 21:00

ஏமாற்றவே பிறந்த காங்கிரஸார். வெட்கங்கெட்ட ஜன்மங்கள்


sankaranarayanan
ஜூன் 07, 2024 20:52

உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டு தருவதாக கூறி, கவர்ச்சி அறிவிப்புகளுடன் கூடிய வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்தவர்களை ஏன் உச்ச நீதிமன்றம் இன்னமும் கண்டிக்கவில்லை இதுபோன்று பாமர மக்களை ஏமாற்றுவது பல அரசியல் கட்சிகளுக்கு கைதேர்ந்த கலையாகிவிட்டது இதை உச்ச நீதிமன்றந்தான் ஏன் கண்டித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை


மேலும் செய்திகள்







புதிய வீடியோ