உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருமித்த முடிவு; ஒரே நாளில் மதுக்கடைகள் குளோஸ்: சொல்லுறது யாருன்னு பாருங்க!

ஒருமித்த முடிவு; ஒரே நாளில் மதுக்கடைகள் குளோஸ்: சொல்லுறது யாருன்னு பாருங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்' என வி.சி.க., தலைவர் திருமாளவன் தெரிவித்தார்.இது குறித்து திருமாவளவன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: உணர்வுபூர்வமான ஒரு பிரச்னையில் நாம் கை வைத்துள்ளோம். இது எல்லாம் மாநாடு போல சாதாரணமானதாக நினைத்து விடக் கூடாது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அனைத்து கட்சிகளும் மதுவை ஒழிக்க வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன. ஒரு கட்சி கூட மதுக்கடைகள் இருப்பதால் என்ன தவறு என்று சொல்ல வாய்ப்பு இல்லை.

மூடிவிட முடியும்!

அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. இது தான் நாம் முன்வைக்கிற கேள்வி. எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன? அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்! இந்திய அரசே! தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு! மதுவிலக்கு சட்டத்தை இயற்று! தமிழக அரசே! மதுக்கடைகளை இழுத்து மூடு!. இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

Mohan das GANDHI
அக் 20, 2024 14:39

திருமா குருமா மாவு இவன் பொய்யன் திமுக காரன் மதுபிரியன் என்பதே. வாயில் நன்கு வடை சுடுகிறான். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி கோபாலபுரத்தில் பெட்டி பெற்று இவன் பெயர் அட்ரஸ் தெரியாத கட்சியை நடத்துகிறான் கோபாலபுரம் கொடுக்கும்??


Matt P
அக் 18, 2024 13:10

தமிழக அரசே மதுக்கடைகளை இழுத்து மூடு....நிதானம் இழந்து போதையில் பேசலையே


Yaro Oruvan
அக் 13, 2024 18:58

ஒத்த பிளாஸ்டிக் சேருக்கு எம்புட்டு அக்கப்போரு ... ஷ்ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே.. மது ஒழிப்பு மாநாட்டுக்கு வந்தவனுவலுக்கு குவார்ட்டரும் 200 ஓவாயும் கொடுத்த இந்த கும்பல் காமெடி அளவே இல்ல.. வடிவேலுக்கு பதிலா குருமாவைப்போட்டு படம் பண்ணலாம் .. ஜஸ்ட் 2 பிளாஸ்டிக் சேர் குடுத்தா போதும்.. மண்டி போட்டு முட்டு கொடுத்து கூவுவானுவ


Harindra Prasad R
அக் 09, 2024 14:32

மது தொழிற்ச்சாலைகளை தேசிய மயமாகுலமா திருமா அவர்களே .. மது கடைகள் மூட மத்திய அரசு எதற்கு தமிழ் நாட்டில் தானே மது தொழிற்ச்சாலைகள் இருக்கு அதை மூடிநாள் அதுவே போதுமே ... குரல் கொடுப்பீர்களா திருமா அவர்களே ..... நீட் சாயம் வெளுத்துபோச்சு ......... பாமரணும் டாக்டர் ஆகுறான் ....


M Ramachandran
செப் 29, 2024 19:44

இந்த ஆள் பேசுவதைய்ய தெரு போக்கண் கூடா நம்பமாட்டான். சுய நல வாதி அடிமை. இவன் சார்ந்த கூட்டத்தியெ தன சுய நலத்திர்க்கு விற்று விட கூடிய சாமர்த்தியம் நிறைந்த ரீல் விட்டு யேமாற்றும் திறமைய்ய மிக்கவர்.


sankar
செப் 29, 2024 10:31

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த காமெடியன் விருது இவருக்கு கொடுக்கலாம்


Lingam
செப் 28, 2024 06:36

தனது ஒரே ஒருவர் நலனுக்காக ஒட்டுமொத்த சமூகத்தினரையும் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு ஒப்பற்ற மனிதர்


S. Neelakanta Pillai
செப் 23, 2024 13:30

நம்மள எல்லாம் இவனுங்க எவ்வளவு லூசுன்னு நினைச்சிருந்தா இது போல மாநாடு போடுவதும், கருத்து சொல்வதும்.... தமிழ்நாட்டில் தரம் மிக மிக கீழ் இறங்கி விட்டது. இது போன்ற அசிங்கங்களை தடுத்து நிறுத்துவது தான் உண்மையான நாட்டின் மீது பற்று உள்ளவர்களின் முதல் கடமையாகும்.


ADVOCATE DALIT PRAVINA G MBBS BL
செப் 23, 2024 13:29

திருமாவளவன் அவர்கள் திமுக கலைஞர் கருணாநிதி ஸ்டாலின் குடும்ப போதையில் இருந்து வெளிவர முடியுமா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போதை விட முடியாத போதை ஆனால் அந்த போதையை விட்டால் தான் நாடு உருப்படும் வீடும் உருப்படும் ... எல்லாம் சரி வரும் மது ஒழிப்பு மது ஒழிப்பு மது ஒழிப்பு என சொல்லித் தானே தற்போது திமுக ஸ்டாலின் கனிமொழி குடும்பம் ஆட்சிக்கு வந்தது ? பிறகு என்ன ? ஒரே கையெழுத்தை போடு முதல் கையெழுத்தை ஏன் போடல திமுக ஸ்டாலின் னு .... நேரா திமுக ஸ்டாலின் குடும்ப வீட்டு வாசல்ல போயி போராட வேண்டியது தானே ? திமுக ஸ்டாலின் குடும்ப வீட்டு வாசலுக்கு சென்று விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள்...." போடு மது விலக்கு முதல் கையெழுத்தை " இல்லை ஆட்சியை விட்டு கிளம்பு " என்று போராடினால் அது விசிக தலைவர் திருமாவளவன் அவர்களின் உண்மையான மது விலக்கு போராட்டம் இல்லை என்றால் விசிக தலைவர் திருமாவளவன் அவர்களது " அரசியல் சூதாட்ட போராட்டம்" வழக்கறிஞர் தலித் கோ பிரவீணா MBBS BL President ஆல் இண்டியா தலித் சமாஜ் மற்றும் தமிழ் முன்னேற்ற கழகம்


karthik
செப் 23, 2024 09:53

இதெல்லாம் ஒரு அரசியல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை