உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதுகாப்பு வேளாண் மண்டலம்: மயிலாடுதுறை மாவட்டம் சேர்ப்பு

பாதுகாப்பு வேளாண் மண்டலம்: மயிலாடுதுறை மாவட்டம் சேர்ப்பு

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்க்கும் சட்ட திருத்தத்திற்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது, அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், கடலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா ஐந்து வட்டாரங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, 2020ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது; இதற்கான சட்டம் இயற்றப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டதால், அதையும் பாதுகாக்க வேளாண் மண்டலத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்காக, சட்டசபையில், 2023 அக்., 10ம் தேதி சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இது கவர்னர் ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சமீபத்தில், கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும்படி, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதாக கவர்னர் ரவி உறுதியளித்தார்.இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட திருத்தத்திற்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இது, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மையை பாதிக்கும் எந்த பணிகளும் இனி அனுமதிக்கப்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Varadarajan Nagarajan
ஜன 04, 2024 18:55

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஆறுகளில் மட்டுமல்லாது வேறு எங்குமே மணல் குவாரி அமைக்க கூடாது. ஆறுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டும். அப்படி இல்லாமல் இந்த மாவட்டங்களில் பாயும் அனைத்து ஆறுகளிலும் பல மீட்டர் ஆழத்திற்கு மணல் கொள்ளை செய்துகொண்டு, பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தால் என்ன பயன். இந்த சட்டத்தை வேண்டுமானால் மத்திய அரசின் சில திட்டங்களுக்கு எதிராக பயன்படுத்தலாம். வேறு பயன் இல்லை


Sivagiri
ஜன 04, 2024 14:11

கொல்ல மாட்டாங்க , ஆனா, வாழ விடாமல் செஞ்சிருவாங்க - -


ஆரூர் ரங்
ஜன 04, 2024 10:21

காவிரியில் தண்ணீர் வரவில்லை. வேறு தொழில்களைத் துவக்க இந்த சட்டம் இடம் கொடுக்காது.????ஆக டெல்டாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு ஆப்பு.


கனோஜ் ஆங்ரே
ஜன 04, 2024 18:37

டெல்டாவுல நெல்லு வெளையில..ன்னா, நீயும் நானும் தமிழ்நாட்டில் இருக்கும் மக்களெல்லாம் பட்டினியா சாகணும்..னு சொல்றியா....? படித்த இளைஞர்கள், விவசாய பார்க்க மாட்டானுங்களா... இல்ல... பார்க்கக் கூடாதா....? ஏன், அங்கேயும் உரம் மற்றும் பெட்ரோல் தொழிற்சாலை ஆரம்பிச்சு... கட்டிங்க பைல போட்டுட்டு போகலாம்..னு பார்க்குதா உன்னோட கட்சி... ஆகமொத்தம், தமிழ்நாட்டையும், தமிழ்நாடு வளத்தையும் அழிக்கணும்..னு முடிவு பண்ணிட்டீங்க போலிருக்கே...?


Ramesh Sargam
ஜன 04, 2024 06:48

இப்படி நேராக பேசி பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு காண வேண்டியது முதல்வர்-கவர்னர் பொறுப்பு. சும்மா வீம்புக்கு சண்டை போட்டு கொண்டிருப்பது சரியல்ல. சிறப்பான ஆட்சிக்கு முதலிடம். அசிங்க அரசியலுக்கு எப்பொழுதுமே கடைசி இடம்தான் நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் கொடுக்கவேண்டும். புரிஞ்சா சரி.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை