உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது நாட்டில் புதிய சகாப்தம் துவங்கியதன் அறிகுறி ஆர்.எஸ்.எஸ்., பொதுக்குழுவில் தீர்மானம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது நாட்டில் புதிய சகாப்தம் துவங்கியதன் அறிகுறி ஆர்.எஸ்.எஸ்., பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச்செயலராக தத்தாத்ரேய ஹொசபலே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், அகில பாரத பிரதிநிதி சபா எனப்படும் தேசிய பொதுக்குழு கூட்டம், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், கடந்த 15, 16, 17ம் தேதிகளில் நடந்தது.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சட்ட விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு பொதுச்செயலர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, பொதுக்குழுவின் நிறைவு நாளான நேற்று பொதுச்செயலர் தேர்தல் நடந்தது. இதில், 2021ல் இருந்து பொதுச்செயலராக இருக்கும் தத்தாத்ரேய ஹொசபலே, மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்; 2027 வரை அவர் பொதுச்செயலராக இருப்பார்.கர்நாடகா மாநிலம், ஷிவமோகாவை சேர்ந்த ஹொசபலே பள்ளியில் படிக்கும் போதே ஆர்.எஸ்.எஸ்.,ஸில் இணைந்தவர். எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படித்த அவர், படிக்கும் போதே எமர்ஜன்சியை எதிர்த்து போராடியதால் சிறை சென்றார். ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.,யில் நீண்ட காலம் பணியாற்றியவர். 1992 முதல் 2003 வரை ஏ.பி.வி.பி.,யின் அகில பாரத அமைப்பு செயலராக இருந்தவர்.ஆர்.எஸ்.எஸ்.,ஸில் அகில பாரத அறிவுசார் பிரிவின் செயலர், இணைப் பொதுச்செயலர் போன்ற பொறுப்புகளிலும் ஹொசபலே இருந்துள்ளார்.ஒரு லட்சம் ஷாகா இலக்குவரும் ஆண்டு முழுதும், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அதற்கான பல்வேறு செயல் திட்டங்கள் பொதுக்குழுவில் வகுக்கப்பட்டன. தற்போது நாடு முழுதும் 73,117 ஷாகாக்கள் நடந்து வருகின்றன. நுாற்றாண்டு விழா முடியும் போது, ஒரு லட்சம் ஷாகாக்கள் என்ற இலக்கை எட்ட வேண்டும் என, பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் தெரிவித்தனர்.ஆர்.எஸ்.எஸ்., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்திருப்பது, உலக வரலாற்றில் அற்புதமான தருணம். ஹிந்து சமுதாயத்தின் பல நுாற்றாண்டு கால இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக, பல்வேறு காலகட்டங்களில் நடந்த போராட்டங்களில் உயிர் நீத்த அனைவருக்கும் பொதுக்குழு அஞ்சலி செலுத்துகிறது.புதிய எழுச்சிஅயோத்தியில் ராமர் கோவில் இருந்தது என்பதை உறுதி செய்ய தொல்லியல், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், சட்ட நிபுணர்களுக்கு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பூஜிக்கப்பட்ட அட்சதையுடன் அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளில், பல லட்சக்கணக்கானோர் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றனர். கும்பாபிஷேகம் நடந்த ஜனவரி 22ம் தேதி இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுதும் வீடுகளில் காவி கொடியேற்றுதல், கிராமங்களில் ராமர் சிலைகள், படத்துடன் ஊர்வலங்கள், கூட்டு பஜனை, வழிபாடு என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவை சமூகத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளன.அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டிருப்பது, இந்தியாவில் புதிய சகாப்தம் துவங்கியதன் அறிகுறியாகும். அன்னிய ஆட்சியால் ஏற்பட்டிருந்த நம்பிக்கையின்மை, சுய மறதியில் இருந்து இந்திய சமூகம் வெளிவந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி