உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவாரூரில் நெல் சேமிப்பு தளம் நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு

திருவாரூரில் நெல் சேமிப்பு தளம் நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு

சென்னை:மத்திய அரசின் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், நேரடி கொள்முதல் நிலையங்களில் வைக்கப்படுகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், நிலையங்களுக்கு வெளியில் திறந்தவெளியில் வைக்கப்படுகிறது. இதனால், மழையில் நனைந்து நெல் மூட்டைகள் பாழாகின்றன. எனவே, நெல்லை பாதுகாப்பாக வைக்க, 2022 - 23 முதல் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்களை வாணிப கழகம் கட்டி வருகிறது. இதுவரை, 3.63 லட்சம் டன் சேமிப்பு திறனில், 23 நெல் சேமிப்பு தளங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கும்பகோணத்தில், 9,000 டன், கடலுார் வேப்பூரில், 9,500 டன், மதுரை மேலுாரில், 15,000 டன், வாடிப்பட்டியில், 7,000 டன் கொள்ளளவில் சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டு வருகின்றன.தற்போது, திருவாரூர் மாவட்டத்தில் ஆதனுாரில், 5,000 டன், கோவிலுாரில், 4,500 டன், மூவநல்லுாரில், 2,000 டன் கொள்ளளவில் நெல் சேமிப்பு தளங்கள் கட்டப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை