உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊதிய உயர்வு கூட்டுறவு ஊழியர்கள் வலியுறுத்தல்

ஊதிய உயர்வு கூட்டுறவு ஊழியர்கள் வலியுறுத்தல்

சென்னை:தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 45 மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் உள்ளன. பண்டகசாலை பணியாளர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஏப்., முதல் புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதை நிர்ண யம் செய்வது தொடர்பாக, சென்னையில், நுகர்வோர் பணிக்கான கூடுதல் பதிவாளர் அம்ரித், 15 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சு நடத்தினார். இது குறித்து, தொழிற் சங்கத்தினர் கூறியதாவது: பண்டகசாலைகள் வருவாய் ஈட்டும் திறன் அடிப்படையில், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் அறிவிப்புக்கு, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிக லாபம் ஈட்டும் பண்டசாலை பணியாள ருக்கு அதிகமாகவும், குறைவாக லாபம் ஈட் டுவதற்கு குறைத்தும் ஊதிய உயர்வு வழங்கக் கூடாது. அனைத்து பண்டகசாலைக்கும் ஒரே சமமாக, 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை