உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூரில் பயங்கர வெடிவிபத்து; மூவர் பலி; 4 பேர் காயம்; 8 வீடுகள் இடிந்து நாசம்!

திருப்பூரில் பயங்கர வெடிவிபத்து; மூவர் பலி; 4 பேர் காயம்; 8 வீடுகள் இடிந்து நாசம்!

திருப்பூர்: திருப்பூரில் இன்று (அக்.,08) பகலில் நடந்த பயங்கர வெடிச்சம்பவத்தில், மூவர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடித்தது என்ன என்று போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.திருப்பூரை அடுத்த பூலுவபட்டி, பொன்விழா நகரில் இன்று நண்பகல் நேரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. ஒரு கிலோ மீட்டருக்கு வெடிசத்தம் கேட்டது. பலத்த நில அதிர்வும் ஏற்பட்டது. வெடிவிபத்து நடந்த இடத்தில் அருகில் உள்ள வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tdhb3kec&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இடிந்து விழுந்த வீடுகளுக்குள் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன. குழந்தைகள் உட்பட நால்வர் படுகாயத்துடன் கிடந்தனர். தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.வெடிச்சம்பவம் நேரிட்ட உடன், போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அருகே உள்ள 8 வீடுகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. தீயணைக்கும் படையினர், சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடய அறிவியல் நிபுணர்கள், வெடித்தது என்ன என்று ஆய்வு செய்கின்றனர். சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் முகாமிட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடக்கிறது.திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி கூறியதாவது: கார்த்திக்கின் மனைவி சத்யபிரியா, சத்ய பிரியாவின் சகோதரர் சரவணக்குமார் இவர் கோவில் திருவிழாவுக்கான வெடிகளை தயாரித்துள்ளார். ஒன்பது மாதம் குழந்தை மற்றும் பெண் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண் சத்யபிரியாவாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். அறிவியல் பூர்வ ஆதாரங்கள் திரட்டப்ப்படுகின்றன. சரவணக்குமார் ஈரோட்டில் பட்டாசு தயாரிப்புக்கான லைசென்ஸ் வைத்துள்ளார். ஆனால் இங்கு தயாரித்தது சட்டத்துக்கு புறம்பானது. இவ்வாறு அவர் கூறினார்.கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில், சேதமடைந்த வீடுகள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமல் இங்கு தயாரித்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

M Ramachandran
அக் 08, 2024 20:40

அதெல்லாம் வெடி எல்லாம் கிடையாது. கார் டயர் வெடித்த சத்தமாகும். மாக்கள் பீதி அடைய வேண்டாம். you Tube இல் போனாய் செய்தி வெளியிட்டால் காவல் துறைக்கு தெரிய படுத்துங்கள் உங்கள் அடையாளத்துடன் ஊடகத்தில் உங்கள் புடம் போட்டு தக்க வேகுமதி அளிக்கப்படும்


M Ramachandran
அக் 08, 2024 20:08

நேத்து ஒரு வெத்து வேட்டு ஆளுநரை குறைகூறி பிளிறிச்சே. இதன் பெயர் என்ன. NIA முதலில் உங்களை உளவு பார்க்க வேண்டும் எப்போதெல்லாம் தீ மு கா ஆட்சிக்கு வருதோ அப்போதெல்லாம் வெகு தாராளமாக வெடி குண்டு வெடிக்குது. சிறிதும் கவலை படாமல் ஓட்டுக்காக கேவலமான செயல் செய்வதால் மக்களுக்கு கேடு. மக்களென அதைய்ய அப்ற்றி காவலிய்ய படா வில்லை. அவன் அவன் குடும்பத்தாருக்கு கையோ காலோ போனாலும் அவனும் கவலை பட மாட்டான் கொடுத்தை மன உவப்புடன் வாங்கி அதற்க்கு நன்றியாகா ஓட்டை கொடுத்து விடுவான். எல்லாம் மறைத்து போயாச்சு.


தமிழ்வேள்
அக் 08, 2024 19:57

மூர்க்கத்தை உள்ளே விட்டால் இதுதான் கதி.... எப்படியும் ஒருநாள் திமுகவையே பதம் பார்த்து விடுவர்..அவர்களை பொறுத்தவரை திமுக கும்பலும் காஃபிர்களே..


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 08, 2024 19:03

மன்னரின் வலதுகரமாக இருந்த சைக்கிள்பாப்பு வந்து சொல்லுவார் இீ்ப்படி–வெடிச்சது சிலிண்டர்ன்னு ......


Natchimuthu Chithiraisamy
அக் 08, 2024 17:34

பட்டாசு அல்ல, வெடிகுண்டு தயாரிப்பு


R S BALA
அக் 08, 2024 17:28

ஏம்ப்பா ,வீடியோவ பார்த்தா வீடு, இருசக்கர வாகனம் எல்லாம் தூள் தூளாக சிதறி கெடக்கு.வெடி வெடிச்சதுக்கா இந்த நிலைமை .அப்போ தீபாவளிக்கு வெடிக்கிற வெடிக்கு ஒரு கட்டிடம் கூட தப்பாதே.ஏதாச்சும் நம்புற மாதிரி கத சொல்லுங்க...


nagendhiran
அக் 08, 2024 17:16

யாரும் விடியலை குறை சொல்லக்கூடாது? அதான,அதே தான?


Anand
அக் 08, 2024 17:15

பட்டாசு வெடித்ததா அல்லது வேறு ஏதாவது வெடித்து சிதறியதா? ஒருவேளை பட்டாசுகள் வெடித்து சிதறியிருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும். வெளிப்படையான தீர விசாரணை தேவை....


Ramesh Kumar
அக் 08, 2024 17:03

வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை காவல்துறை புலனாய்வு செய்து தெரிவிக்க வேண்டும். வழக்கம் போல் இந்த சம்பவத்தை கிடப்பில் போட்டு விட கூடாது. வெடி விபத்து ஏற்பட்ட பகுதி மக்கள் அடர்த்தி அதிகம், காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் .வெடிக்காமல் இருந்த குண்டுகள் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததும், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.இனிமேலாவது ஆட்சியாளர்கள் 50000 கோடி அந்நிய செலவாணி ஈட்டி தரும் திருப்பூருக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தரவேண்டும்.


HoneyBee
அக் 08, 2024 16:37

இது எதை படை மாற்ற... எலே எலவட்ட பயலே.. மாத்தி சோசிங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை