உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறையில் இருந்தே குற்றவாளி வாதாட ஐகோர்ட் அனுமதி

சிறையில் இருந்தே குற்றவாளி வாதாட ஐகோர்ட் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சென்னை அடையாறு காந்தி நகரில், 'விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ், செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்' என்ற நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிறுவனங்கள், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் பதிவு செய்த வழக்கில், 'சுபிக்ஷா' நிறுவன இயக்குனர் ஆர்.சுப்ரமணியனுக்கு, கடந்தாண்டு நவம்பரில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், சுபிக்ஷா சுப்ரமணியன் சார்பில் தாக்கல் செய்த மனுவில், 'எனக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 'இவற்றில் சில வழக்குகளில், நானே வாதிட அனுமதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த வழக்குகளில் மனுதாரர் தானே வாதிட விரும்புகிறார் என்ற விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல், 3க்கு தள்ளி வைத்தனர்.மேலும், மனுதாரரை, வாதிட அனுமதிப்பதாக இருந்தால், சிறையில் இருந்தே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வாதிட அனுமதிக்கலாம்.'வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகி வாதிட, சிறைத்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்; அதற்கு நீதிமன்ற உத்தரவு அவசியமில்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

rama adhavan
பிப் 22, 2024 12:29

தமிழை வழக்கு மொழி ஆக்கி, நீதிபதிகள் பொறுமையை கடைபிடித்து, வாதத்திற்கு நேரம் குறித்து, நீதிபதிகளுக்கு உதவி செய்ய சட்டம் படித்த உதவியாளர்களை வைத்தால் மனுதாரர்களே நேரடியாக வாதிடலாம். வக்கீல் செலவு, வாயிதா நேரம் மிச்சம்.


Seshan Thirumaliruncholai
பிப் 22, 2024 11:56

காவல் துறை முதல் தகவல் அறிக்கையை வைத்து வழக்கு விசாரணை தொடங்குகிறது. தகவல் அறிக்கை எத்தனை % உண்மை என்பது கேள்விக்குரியது. வழக்கு தொடரும் முன் திரை மறைவு விசாரணை கைதியுடன் இருக்கவேண்டும். குற்றவாளி கூண்டில் எடக்கு மடக்கு கேள்விகளுக்கு திரை மறைவு வாக்குமூலம் நிச்சியம் மாறுபடும். இது வக்கீலை எடக்கு மடக்கு செய்திட நீதிபதிக்கு உதவும்.


Ramesh Sargam
பிப் 22, 2024 08:17

செந்தில் பாலாஜிக்கும் இந்த அனுமதி உண்டா?


J.V. Iyer
பிப் 22, 2024 07:05

ஜீ ஸ்கொயர் எல்லாம் எப்போது சிறைக்குள் வரும்?


Ramesh Sargam
பிப் 23, 2024 00:16

புது சிறை கட்டிடம் கட்டியவுடன்...


Duruvesan
பிப் 22, 2024 06:39

ஆக செந்திலு நீயே உனக்கு வாதாடினால் ஜாமீன் கிடைக்கும். வக்கீல் உன்னை வெச்சி செய்யறார் விடியலின் ஆணை படி


duruvasar
பிப் 22, 2024 06:12

வழக்குரைஞர் பீஸ் மிச்சம்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 22, 2024 09:18

சட்ட அறிவு இருந்தால் பயனளிக்கும் ......


Kasimani Baskaran
பிப் 22, 2024 05:23

இதைப்பார்த்து முன்னாள் மான்புமிகு செபாவே தனது வழக்குக்கு வாதிட முனைந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை