உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 36வது முறையாக ஜூன் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y99velp8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வங்கி சார்பில், அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படும் வரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.இது மனுவை விசாரித்த, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மனு மீதான விசாரணை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

காவல் நீட்டிப்பு

இதற்கிடையே, காணொலி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, 36வது முறையாக நீதிமன்ற காவலை ஜூன் 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rajasekar Jayaraman
மே 01, 2024 10:43

ஐ பெரியசாமியின் பொன்முடியும் எந்த நீதிபதியிடம் முறையிட்டார்களோ அவரை தேடி கண்டுபிடித்து ஜாமீன் மனுவை கொடுக்கவும் உடனடியாக தீப்பு வழங்கப்படும்.


Dharmavaan
ஏப் 30, 2024 21:02

ஏன் இவர திகார் சிறைக்கு கொண்டு செல்லவில்லை இவர் தம்பியை தலை மறைவு குற்றவாளியாக ஏன் அறிவிக்கவில்லை அமலாக்கத்துறை கேவலம்


Dharmavaan
ஏப் 30, 2024 20:59

இந்த அரசியல் திருடர்களுக்கு ஜாமீன் மனு போட வரைமுறை இல்லையா என்ன கேவலமான சட்டம் இது தினம் போடலாமா


Ramesh Sargam
ஏப் 30, 2024 20:50

இவருக்கு கொடுக்கப்படும் தண்டனை மற்ற திருடர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும்


தாமரை மலர்கிறது
ஏப் 30, 2024 18:57

ஜூன் நாலாம் தேதி தேர்தல் ரிசல்ட் வரும் அப்போது பத்து ரூவா பாலாஜியின் தலைவிதியும் தீர்மானிக்கப்படும் கொள்ளையடித்த குற்றத்திற்கு சாகும்வரை சிறையில் தள்ளப்படுவர்


Rajagiri Apparswamy
ஏப் 30, 2024 18:50

பாராளுமன்ற முடிவுகள் வந்த பிறகு ஜாமினில் வெளிவர திட்டம் தேர்தல் முடிவுகளை பொறுத்து பாரதீய ஜனதாவில் சேர திட்டமாகக்கூட இருக்கலாம்


C.SRIRAM
ஏப் 30, 2024 18:07

இனி ஜாமீனுக்கு விண்ணப்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் கட்டணம் என்று நிர்ணயம் செய்யவேண்டும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதற்காக


V RAMASWAMY
ஏப் 30, 2024 18:01

இனி அவர் ஜாமீன் கேட்கும் எந்த மனுவும் போடக்கூடாது என்று தீர்ப்பு வரவேண்டும்


V RAMASWAMY
ஏப் 30, 2024 18:01

எந்த மனுவும் போடக்கூடாது என்று தீர்ப்பு வரவேண்டும்


கல்யாணராமன்
ஏப் 30, 2024 16:45

அடுத்த என்ன விஷயத்தை சொல்லி, கேட்டு வழக்கு பதிவு செய்யலாம் என்று இந்த யோசித்து விடுவார் செந்தில் பாலாஜி வாரம் தவறாமல் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு வழக்காக பதிவு செய்து கொண்டிருக்கிறார்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ