உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 40வது முறையாக, ஜூன் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்டு இருந்த நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது. காணொலி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில், காவலை ஜூன் 25ம் தேதி வரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்தது.

புதிதாக மனு

இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான உத்தரவை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் இன்று (ஜூன் 19) புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரவு

'வங்கி ஆவணங்கள் தொடர்பாக தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதால் தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும்' என மனுவில் கூறப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

theruvasagan
ஜூன் 19, 2024 23:22

ஒரு தடவை இல்லை. நாற்பது தடவை கோர்ட்டே எங்க செயல்வீரனுக்கு திகார் மேல உள்ள உரிமையை உறுதிப் படுத்திவிட்டது. அவரே நினைச்சாலும் அங்கிருந்து நகர முடியாது. திகாரை நாங்க மொத்தமா ஆக்கிரமிக்கற நாள் வெகு தொலைவில் இல்லை. ஆக டெல்லியிலேயும் நாற்பதும் நமதே. எங்களை யாருன்னு நெனைச்சீங்க.


Kasimani Baskaran
ஜூன் 19, 2024 23:18

சதமடிக்க வாழ்த்துகள் .


Ramesh Sargam
ஜூன் 19, 2024 20:40

40 திமுகவினருக்கு ராசியான எண் போல தெரியுது.


K.Muthuraj
ஜூன் 19, 2024 19:23

இவரின் ஜாமீன் புறக்கணிப்பிற்கு மாநில அரசின் பங்கு இருப்பது போல் தோன்றுகின்றது.


தாமரை மலர்கிறது
ஜூன் 19, 2024 19:10

நூறு வருஷம் சிறையில் இருக்க வாழ்த்துக்கள்.


Sridhar
ஜூன் 19, 2024 18:05

Wasting public money.


raja
ஜூன் 19, 2024 17:09

இனி அணில் அடுத்தவன் காசை ஆட்டையை போடவே யோசிக்கணும்.


Indhuindian
ஜூன் 19, 2024 16:59

செஞ்சுரி அடிக்க வாழ்துக்கல்


Bala
ஜூன் 19, 2024 16:29

எத்தனை தமிழ்க் குடிமகன்களின் வையிற்றை அடிச்சு+10ரூபாக்கள் அடுத்தவனுக்குக் கொடுத்த பாவம் சும்மா விடாது


Palanisamy Sekar
ஜூன் 19, 2024 16:13

சேரக்கூடாது இடத்தில சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாரே பாலாஜி. நாற்பதாவது என்பதை தாண்டி ஐம்பது என்றாகி நூறை தாண்டுமோ ? இப்போதெல்லாம் செந்தில்பாலாஜி பற்றி திமுகவினர் கண்டுகொள்வதே இல்லை. மிகப்பெரிய சந்தேகமே இதில் ஸ்டாலினின் தலையீடு இருக்குமோ ஐயப்பாடடை ஒதுக்க முடியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் செந்திலுக்கு எதிராக சபதமெல்லாம் எடுத்தார்.. இப்போது மறைமுகமாக அவரை பழிதீர்த்துவிட்டார் என்றுதான் தோன்றுகின்றது. அரசியல் சாணக்கியன் இந்த விஷயத்தில் ஸ்டாலின் அவர்கள்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ