உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்ச் 19ல் நடிகை விஜயலட்சுமி ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

மார்ச் 19ல் நடிகை விஜயலட்சுமி ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக, 2011ல் சென்னை வளசரவாக்கம் போலீசில், நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின்படி, தனக்கு எதிராக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார்.மனுவில், '2011ல் அளித்த புகாரை, 2012ல் திரும்ப பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் அளித்தார். இதையடுத்து நடந்த விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு உள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, போலீசார் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின், வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெற, நடிகை விஜயலட்சுமி ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பின், வழக்கு பட்டியலிடப்படவில்லை.இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும், 19 பிற்பகல் 2:15 மணிக்கு புகார்தாரரான நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி