உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பறிமுதல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்'' என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதித்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f2tp0ro6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, ‛‛ நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அரசியல் கட்சியினரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஸ்டிக்கர், கருப்பு கண்ணாடி ஒட்டிய வாகனங்களை சோதனை செய்ய வேண்டும். இந்த வழக்கில் வரும் 20 ல் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக வேண்டும்'' எனக்கூறி வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S. Neelakanta Pillai
ஜூன் 07, 2024 07:49

பறிமுதல் செய்ய வேண்டுமாம். அந்த அளவுக்கு இது ஒரு பெரிய குற்றமா வேடிக்கையாக இருக்கிறது நீதிபதிபாலனம். போக்குவரத்து விதிகளை மீறும் கொடும் குற்றங்களை பற்றி இந்த நீதிமன்றங்களும் அதிகாரிகளும் கவலைப்படுவதில்லை நம்பர் பிளேட்டில் வாசகம் பொரிப்பது அநேகமாக அரசியல் கட்சிகளும் அதிகாரிகளும் தான் இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்று சொன்னால் நீதி பரிபாலனத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் வக்கீல்கள் தான். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த உத்தரவில் அரசியல் கட்சிகளும் என்று அழுத்திச் சொன்னதிலிருந்து அவர்கள் இதுவரை விதிவிலக்கு பெற்று வந்திருக்கிறார்கள் என்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதை நீதிமன்றங்களும் இதுவரை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதுதான் பரிதாபம். தோற்றுப் போன நீதிபரிபாளனம் வெட்கக்கேடு இங்கே எவனுக்கும் வெட்கமில்லை


மேலும் செய்திகள்







புதிய வீடியோ