உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நியமன உத்தரவின்றி அதிகாரிகள்; அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

நியமன உத்தரவின்றி அதிகாரிகள்; அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், மயிலாப்பூரைச் சேர்ந்த, டி.ஆர்.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் பல கோவில்களில், நிர்வாக அதிகாரிகளாக அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 47 கோவில்களில் பணிபுரியும் நிர்வாக அதிகாரிகளுக்கு நியமன உத்தரவு இல்லை. அதனால், இவர்களின் பணிக்காலம் எவ்வளவு என்று தெரியவில்லை. உரிய உத்தரவுகளுடன் நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றினாலும், அது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது.எனவே, நியமன உத்தரவு இன்றி, கோவில்களில் நிர்வாக அதிகாரிகள் இருப்பது சட்டவிரோதமானது. ஐந்து ஆண்டுகள் வரை நிர்வாக அதிகாரிகளை, ஆணையர் நியமிக்கலாம் என்பது சரியல்ல. சட்டவிரோதமாக நிர்வாக அதிகாரிகள் இருப்பது, கோவில்களை தவறாக நிர்வகிக்க வழிவகுக்கும். இவர்களை அகற்றிவிட்டு, அறங்காவலர்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களுக்கு நியமிக்கப்படும் அறங்காவலர்கள் வசம், நிர்வாகத்தையும், கோவில் சொத்துக்களையும் ஒப்படைக்க வேண்டும். தினசரி பூஜை, சடங்குகள், சம்பள பட்டுவாடா, கோவில் பொது பராமரிப்பு தவிர்த்து, நிர்வாக முடிவுகளை எடுக்க, நிர்வாக அதிகாரிகளாக பணியாற்றுபவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, வழக்கறிஞர் அபினவ் பார்த்தசாரதி ஆஜராகினர். அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். மனு குறித்து, அரசு தரப்பில் அறிக்கை அளிக்க முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை மார்ச்சுக்கு தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

duruvasar
ஜன 20, 2024 16:15

மாவட்ட செயலார்களின் பணியில் நீதிமன்றம் தலையிட முடியுமா ?


GMM
ஜன 20, 2024 09:15

நியமன உத்தரவு இல்லாமல் பணி செய்ய முடியாது. நீதிமன்றம் சட்ட விரோதமாக கருதி, நிறுத்த முடியும். (நியமன உத்தரவு அடிப்படையில் தான் பணி பொறுப்பு ஏற்க வேண்டும். சம்பளம் வழங்க முடியும். நிர்வாக அலுவலர் அறநிலைய விதிகள் அமுல்படுத்த முடியும்.) சட்ட விதிகள் இல்லாமல், 5 ஆண்டுகள் ஆணையர் நியமிக்க முடியாது. அதிகாரம் இல்லை. அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க ஏன் மறுப்பு? கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன?


Kasimani Baskaran
ஜன 20, 2024 08:00

கணக்கு வழக்குகளைப்பார்க்கும் ஆடிட் பிரிவு இது போன்ற அடிப்படை விதிமீறல்களை ஏன் கருத்தில் கொள்வதில்லை?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை