உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுவன் கடத்தல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

சிறுவன் கடத்தல் வழக்கில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார், திருவள்ளூர் மாவட்ட போலீசாரிடம் இருந்த ஆவணங்களை பெற்று, விசாரணையை துவக்கி உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தனுஷும், 23; தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீயும்,21 காதல் திருமணம் செய்தனர். இவர்களை பிரிக்க, தனுஷ் தம்பி கடத்தப் பட்ட விவகாரத்தில், ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இவர்களிடம், திருவள்ளூர் மாவட்ட டி.எஸ்.பி., தமிழரசி தலைமையில், திருவாலங்காடு போலீசார் விசாரித்து வாக்குமூலம் பெற்று உள்ளனர். கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இம்மனு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற முடியாது' என்று தெரிவித்தனர்.உடன், சிறுவன் கடத்தல் வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போன்ற அமைப்புகள் விசாரிக்கலாமே என, நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு, அரசின் சார்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இதுவரை கைதானவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலம் போன்ற விபரங்களை, திருவாலங்காடு போலீசாரிடம் பெற்று, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை