உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொட்டில் குழந்தைகள் திட்டம் 2024ல் 129 குழந்தைகள் மீட்பு

தொட்டில் குழந்தைகள் திட்டம் 2024ல் 129 குழந்தைகள் மீட்பு

சென்னை:தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் வாயிலாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் வரை, 129 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அதிகரித்து வரும், பெண் சிசுக்கொலைகளை தடுக்க, 1992 முதல் தொட்டில் குழந்தை திட்டம், 10 மாவட்டங்களில் அரசால் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் துவங்கியதில் இருந்து இதுவரை, 4,730 பெண் குழந்தைகள் உட்பட, 6,196 குழந்தைகள் பெறப்பட்டு உள்ளனர்.அவர்கள் குழந்தைகள் காப்பகங்களில் வளர்க்கப்பட்டு, அரசு விதிகளுக்கு உட்பட்டு, குழந்தைகள் இல்லாத தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்படுகின்றனர். இத்திட்டத்தில், 2023ம் ஆண்டில், 155 குழந்தைகள் பெறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நவம்பர், வரை, 79 பெண் குழந்தைகள் உட்பட, 129 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை