வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலைகளுக்கு இடநெருக்கடி என்றால் சென்னை குவதில் வளர்க்கலாம்
மேலும் செய்திகள்
'500 கி.மீ.,க்கு சாலை வனத்துறை அமைக்கும்'
02-Apr-2025
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை பகுதியில், 32 லட்சம் ரூபாய் செலவில், முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு வருவதாக, வனத் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - பாண்டியன்: சிதம்பரம் தொகுதி, பழைய கொள்ளிடம் ஆற்றங்கரைப் பகுதியில், முதலைப் பண்ணை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர் பொன்முடி: தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை பகுதியில், முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்க, 32 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இது, சிதம்பரம் பகுதிக்கு அருகில் உள்ளது. பாண்டியன்: பழைய கொள்ளிடம் ஆற்றில், 500க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. அவ்வப்போது கிராமத்திற்குள் புகுந்து, கால்நடைகளை இழுத்துச் செல்கின்றன. ஆற்றில் குளிக்க செல்வோரையும் தாக்குவதால், உயிர் சேதம் ஏற்படுகிறது. அணைக்கரை பகுதியில் இருந்துதான், முதலைகள் வருகின்றன. அதை தடுத்து நிறுத்துவதுடன், முதலைகளை பிடித்து, சிதம்பரத்தில் பண்ணை அமைக்க வேண்டும்.அமைச்சர் பொன்முடி: ஒகேனக்கல், சாத்தனுார் அணை, அமராவதி ஆணை ஆகிய இடங்களில், முதலைப் பண்ணைகள் உள்ளன. 14 முதலைகள்
கோடைக்காலத்தில், கொள்ளிடம் நிலை வாய்க்காலில் நீர் வற்றி, தண்ணீர் இல்லாததால், தண்ணீர் உள்ள கொள்ளிடம் பகுதியான தவர்த்தாம்பட்டு, காட்டுக்கூடலுார், வல்லம் படுகை பகுதிக்கு சென்று, முதலைகள் தங்கி விடுகின்றன. வக்கிரமா ஏரி, அணைக்கரை பகுதியில், முதலைகள் பிடிக்கப்பட்டு விடப்படுகின்றன. இதுவரை 14 முதலைகள் பிடிக்கப்பட்டு, நீர் நிலைகளில் விடப்பட்டுள்ளன. முதலையால் பாதிக்கப்பட்ட இருவருக்கு இழப்பீட்டுத் தொகையாக, தலா, 25,000 ரூபாய் வழங்கப்பட்டது. பாண்டியன்: சிதம்பரம் தொகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில், 20 மீனவ கிராமங்களில், கடற்கரையையும், கிராமத்தையும் இணைக்கும் பகுதி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியில் சாலைகள் ஏற்படுத்த, வனத்துறை அனுமதிக்க வேண்டும்.அமைச்சர் பொன்முடி: ஏற்கனவே இருந்த சாலைகளை சீரமைக்க, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பகுதிகளில் சாலை அமைக்க, அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். பலா மரங்கள்
தி.மு.க., - பிச்சாண்டி: சாத்தனுார் அணையில், 1,000க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. வயதான முதலைகள் அதிகம் இருக்கின்றன. அதனால், அணையில் முதலைகளுக்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போதிய இடம் இல்லாததால், கரையை நோக்கி, பல முதலைகள் வருகின்றன. எனவே, அங்கு மற்றொரு முதலைப் பண்ணை அமைக்க வேண்டும். வன விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க, வீடுகளில் உள்ள பலா மரங்களில் இருந்த காய்களை, வனத்துறையினர் பறித்துள்ளனர். இதற்கு பதிலாக, வனத்தில் பலா மற்றும் கிழங்கு வகைகளை விளைவிக்க வேண்டும். கேரளாவில் வனப் பகுதியில் தண்ணீர் குட்டைகள் அமைத்துள்ளனர். வன விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க, பழவகை மரங்களை வனத்துறை வளர்க்க வேண்டும்.அமைச்சர் பொன்முடி: திருவண்ணாமலை, சாத்தனுார் அணையில், முதலைகள் பாதுகாப்பாக உள்ளன. காட்டு விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.
முதலைகளுக்கு இடநெருக்கடி என்றால் சென்னை குவதில் வளர்க்கலாம்
02-Apr-2025