உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஏர்டெல் பைபர் சேவை முடக்கம் வாடிக்கையாளர்கள் புகார்

 ஏர்டெல் பைபர் சேவை முடக்கம் வாடிக்கையாளர்கள் புகார்

சென்னை: சென்னையில் ஏர்டெல் தொலை தொடர்பு நிறுவனத்தின், 'எக்ஸ்ட்ரீம் பைபர் ப்ராட்பேண்ட்' சேவையில், அடிக்கடி இணையதள வேகம் குறைவதாகவும், அவ்வப்போது முடங்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 'வைபை' சேவைகளை, மக்கள் பயன்படுத்தும் வகையில், முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், 'ப்ராட்பேண்ட், பைபர் ப்ராட்பேண்ட்' உள்ளிட்ட வழிகளில், பல்வேறு கட்டணத்தில் சேவைகளை வழங்குகின்றன. ஏர்டெல் நிறுவனம் 'எக்ஸ்ட்ரீம் பைபர்' என்ற பெயரில், இணையதள சேவை வழங்கி வருகிறது. மக்கள் தங்கள் இணையதள வேகத்தின் தேவைக்கேற்ப, பணம் செலுத்தி பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மழை நேரங்களில், இணையதள சேவை துண்டிக்கப்படுவதாகவும், வேகம் குறைவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து, வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதாவது: கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, ஏர்டெல் நிறுவனத்தின், 1,199 ரூபாய் மதிப்பிலான 'ப்ராட்பேண்ட்' சேவையை பயன்படுத்தி வருகிறோம். வீட்டில் மூன்று பேர், ஐ.டி., துறையில் வேலை செய்வதால்,'வைபை' சேவை முக்கியமானதாக இருக்கிறது. ஆனால், இந்நிறுவனத்தின் சேவைகள், கடந்த சில நாட்களாக மோசமாக உள்ளன. லேப்டாப்பில் அலுவலக வேலை பார்த்து கொண்டிருக்கும் போது, திடீரென இணையதளத்தின் வேகம் குறைகிறது. 'நெட்ஒர்க்' பிரச்னையாக இருக்கும் என நினைத்தால், அதே நிலை நீடிக்கிறது. இணையதள சேவையில் பிரச்னை ஏற்பட்டால், அதை சரி செய்ய, ஒவ்வொரு பகுதியிலும், 'ஏர்டெல்' நிறுவனம் ஊழியர்களை நியமித்துள்ளது. அவர்களிடம் முறையிட்டாலும், உரிய பதில் இல்லை. எனவே, 'ஏர்டெல்' நிறுவனம், வாடிக்கையாளர்கள் நலன் கருதி, தடங்கல் இல்லாமல், இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை