உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவம்பர் 26ல் உருவாகுது சென்யார் புயல்; 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட்

நவம்பர் 26ல் உருவாகுது சென்யார் புயல்; 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தென்காசி, நெல்லைக்கு இன்று (நவ.,24) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. நாளை (நவ.,25) 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் (நவ.,26) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இவ்வாறு உருவாகும் புயலுக்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் பரிந்துரைப்படி, 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (நவ.,24) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருநெல்வேலி * தென்காசிஇன்று (நவ.,24) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கன்னியாகுமரி* தூத்துக்குடி* விருதுநகர்* ராமநாதபுரம்* சிவகங்கை * புதுக்கோட்டை* தஞ்சாவூர்* திருவாரூர்* நாகை * மயிலாடுதுறைநாளை (நவ.,25) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கன்னியாகுமரி* திருநெல்வேலி* தூத்துக்குடி* ராமநாதபுரம்நாளை மறுநாள் (நவ.,26) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தூத்துக்குடி* ராமநாதபுரம்* புதுக்கோட்டை* தஞ்சாவூர்* திருவாரூர்* நாகைநவ.,29ல் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அந்த மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:* மயிலாடுதுறை* கடலூர்* விழுப்புரம்* செங்கல்பட்டு* காஞ்சிபுரம்* சென்னை* திருவள்ளூர்நவ.,29ல் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அந்த மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:* திருவள்ளூர்* சென்னை* காஞ்சிபுரம்* செங்கல்பட்டு* விழுப்புரம்* கடலூர்* மயிலாடுதுறைநவ.,29ல் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நாகை* தஞ்சாவூர்* திருவாரூர்* அரியலூர்* கள்ளக்குறிச்சி* திருவண்ணாமலை * வேலூர்* ராணிப்பேட்டைஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை