உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.ஐ., பணிக்கு விண்ணப்பிக்க 10ம் தேதி வரை அவகாசம் நீடிப்பு

எஸ்.ஐ., பணிக்கு விண்ணப்பிக்க 10ம் தேதி வரை அவகாசம் நீடிப்பு

சென்னை:போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.காவல் துறைக்கு போலீஸ் எஸ்.ஐ.,க்கள், 1,299 பேரை தேர்வு செய்ய, சீருடை பணியாளர் தேர்வு வாரியம், ஏப்ரல், 4ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கான கல்வித்தகுதி குறித்து விளக்கம் அளித்து, வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ஒன்பதாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 1 படிக்காமல் நேரடியாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களின் இணையவழி மற்றும் நேரடி விண்ணப்பங்களை ஏற்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அந்த நிலையில் உள்ளவர்கள், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம். எனினும், நீதிமன்ற இறுதி உத்தரவு வரும் வரை, அந்த விண்ணப்பங்கள் தற்காலிகமானதாக வைக்கப்படும். எல்லா விண்ணப்பதாரர்களும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று கடைசி நாள் என்பதை மாற்றி, வரும், 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை இணையதளத்தில் திருத்துவற்கான கடைசி நாள், வரும், 15ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி