உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதத்தை இரும்பு கரத்துடன் கையாளுங்கள்: சத்குரு வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை இரும்பு கரத்துடன் கையாளுங்கள்: சத்குரு வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தொண்டாமுத்துார்: 'பயங்கரவாதத்தை இரும்பு கரத்துடன், உறுதியான தீர்மானத்துடன் கையாள வேண்டும்' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவு:

பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல; ஒரு சமூகத்தை அச்சத்தால் முடக்குவது. பீதியை பரப்புவதும், சமூகத்தை பிளவுபடுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தடம் புரளச் செய்வதும், ஒவ்வொரு மட்டத்திலும் சட்டம் இன்மையை உருவாக்குவதுமே நோக்கமாகும். நம் தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கவும், வளர்க்கவும் விரும்பினால், பயங்கரவாதத்தை இரும்பு கரத்துடன், உறுதியான, நீண்ட கால தீர்மானத்துடன் கையாள வேண்டும். கல்வி, பொருளாதாரம், சமூக நலன் என, அனைத்து மட்டங்களிலும் அனைவருக்கும் சம பங்கீடு வழங்குவது நீண்ட கால தீர்வை கொடுக்கும்.மதம், ஜாதி அல்லது அரசியல் தொடர்புகள் ஆகியவற்றின் அனைத்து குறுகிய பிளவுகளுக்கும் அப்பால், ஒரு தேசமாக ஒன்றாக நிற்பதும், நமது பாதுகாப்பு படைகளுக்கு, அவர்களின் கடமையை செய்ய, அனைத்து மட்டங்களிலும் ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானது. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு, சத்குரு பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Tamil selvan c
ஏப் 24, 2025 12:59

இரும்பு கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே தீவிரவாதத்தை அடக்க முடியும்


Apposthalan samlin
ஏப் 24, 2025 11:54

பதன் கொட் தாக்குதலில் இருந்து இன்னும் பாடம் கற்று கொள்ளவில்லை இரும்பு கரத்தை எங்க போய் தேடுவது .


ஆரூர் ரங்
ஏப் 24, 2025 12:46

மும்பைத் தாக்குதலுக்கு பதிலடி குடுக்காம பம்மியது UPA அரசு. அது ஏன்?


Velan Iyengaar
ஏப் 24, 2025 09:57

வாயை கொடுத்து புண்ணாக்கிக்கொள்ளும் கேசு இவர்


Velan Iyengaar
ஏப் 24, 2025 09:56

இவருக்கும் தீவிரவாதத்துக்கு என்ன சம்பந்தம் ???


வாய்மையே வெல்லும்
ஏப் 24, 2025 13:54

ஓரமாக போயிட்டு விளையாடுங்க.


KRISHNA
ஏப் 24, 2025 09:28

வாய்மையே வெல்லும் அவர்களுக்கு நன்று அழுத்துவதற்கு பதிலாக, மோசம் அழுத்தி விட்டேன். sorry.


Jayaprakash Nagarajan
ஏப் 24, 2025 09:24

வலிமையான பாரதத்தை உருவாக்குவோம். பயங்கரவாதிகளை தண்டிப்போம்.


AMMAN EARTH MOVERS
ஏப் 24, 2025 09:13

அதெல்லாம் மத்திய அரசு பாத்துக்கும்


Mohan
ஏப் 24, 2025 07:36

ஊழலில் தான் தைரியம்


வாய்மையே வெல்லும்
ஏப் 24, 2025 07:31

முதல் இலக்கு அடிலெய்டு பொய்யனை இந்தியாவில் கண்டறிவது . அவனுக்கு முட்டு குடுக்கும் ஆட்களும் கண்டறியப்படுவார்கள் என கூர்மைக்கண் கழுகு தின செய்தி கூறுகிறது . அதுமட்டும் இல்ல திருட்டு பாகிஸ்தானுக்கு முட்டு குடுக்கும் இந்தியாவில் தின்று கொழுத்த தேசபற்றுஇல்லாத சாம்பிராணி மடயர்களும் கண்டறிவார்கள் .வந்தே மாதரம்


பிரேம்ஜி
ஏப் 24, 2025 07:06

இவர் மாஜிக் செய்து, யோகம் செய்து தடுத்திருக்கலாம்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்யலாம்! சாதாரண மனிதர்கள் போல் பேசுவது உண்மையான ஆறுதலாக இருக்காது!


வாய்மையே வெல்லும்
ஏப் 24, 2025 08:23

உங்களோட பெயரில் பிரேமை.. மனத்திலோ அழுக்கு .. என்னசெய்வது இது திருடர்களின் ஆட்சி.. உங்களோட பேச்சும் அப்படிதான் உள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை