உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோடிக்கு திமுக நிர்வாகி கொலை மிரட்டல்; அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மோடிக்கு திமுக நிர்வாகி கொலை மிரட்டல்; அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

பிரதமர் மோடிக்கு திமுக மாவட்ட செயலாளர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் ஜெயபாலன். இவர் சமீபத்தில் நடந்த கட்சி ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக பிரதமர் மோடியை ஒருமையில் விமர்சித்தார். அதுமட்டுமின்றி கொலை மிரட்டல் விடும் வகையிலும் பேசினார். இது தொடர்பான வீடியோ, ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவியது.பிரதமர் மோடி குறித்து அவதூறாக மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய தென்காசி மாவட்ட தி.மு.க., நிர்வாகி ஜெயபாலன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (நவ.,27) விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாரில் முகாந்திரம் இல்லை என வழக்கு விசாரணையை முடித்து விட்டதாக அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி