உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை என்பதால் கைவிட முடிவு

சட்டசபையில் வெளியான 256 அறிவிப்புகள் சாத்தியமில்லை என்பதால் கைவிட முடிவு

சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.தமிழக சட்டசபையில் கவர்னர் உரை, பட்ஜெட், துறை மானிய கோரிக்கைகள் விவாதத்தில், அரசின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்புகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, குறிப்பிட்ட கால இடைவெளியில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், தலைமை செயலர், முதல்வர் நிலையில் ஆய்வு செய்யப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e8ixthqi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 2021ல், புதிய ஆட்சி அமைந்த பின், நடப்பு நிதி ஆண்டு வரை, 8,634 அறிவிப்பு கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் 4,516 அறிவிப்புகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளன; அதில், 3,455 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், 256 அறிவிப்புகள் செயல்படுத்த சாத்தியக்கூறு இல்லை என்பதால், அவற்றை கைவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவை தவிர, அரசாணை, நிர்வாக உத்தரவுகளுக்காக, 381 அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன. இந்த விபரங்கள், தலைமை செயலர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன. செயல்படுத்த முடி யாது என்று தெரியவந்த அறிவிப்புகளை கைவிட நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.அதன்படி, எரிசக்தி துறை வெளியிட்ட மின் கேபிள்களை புதைவட கேபிள்களாக மாற்றும் திட்டம்; சென்னையில், நியூ ஆவடி சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை விரிவாக்க திட்டம், நந்தனம், அண்ணா சாலையில் உயர் கட்ட டங்களை இணைக்கும் வான் பாலம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் கைவிடப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்றால், அதை செயல்படுத்துவதற்கான குறைந்தபட்ச சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதை, அதிகாரிகள் தான் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும்.நிலம், நிதி சார்ந்த பல்வேறு பிரச்னைகளால், சில திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். ஆனால், சாத்தியக்கூறு பார்த்து வெளியிடப்பட்ட அறிவிப்புகளும் நிலுவையில் இருப்பதை தவிர்க்க, மேலதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

MARUTHAI RAJA
செப் 22, 2025 09:26

திமுக அரசு வேண்டாம்


Muthukumaran
செப் 20, 2025 14:01

ஆளும் கட்சியை மக்கள் கைவிடுவார்களா. அதிருப்தியும் செயல்படுத்த முடியாத இனங்களில் ஒன்றாக கருதலாம் செயல்படுத்த முடியாத திட்டங்களை தயாரித்தவர் கண்டிக்கப்பட வேண்டியவர். ஏமாற்று அறிவிப்பாக ஏன் இதைக்கருதக்கூடாது.


Padmasridharan
செப் 19, 2025 06:05

பழைய கட்சிகளையும் கைவிட வேண்டுமோ சாமி.


Raajanna
செப் 18, 2025 19:33

தீப்பொறி வடிவேல் பீலா ஞாபகம் வருது. வெத்து திட்ட விளம்பரத்திலேயே 4 ஆண்டுகள் ஓட்டி மக்களுக்கு பெரிய பட்டை நாமம் போட்ட திராவிட மாடல் வாழ்க.


ஆரூர் ரங்
செப் 18, 2025 10:35

குடும்பத்துக்கு தலா 2 ஏக்கர் விலையில்லா நிலம். சூப்பர் வாக்குறுதி. தி.மு.க அரசு அதற்கான நிலங்களை தேடிக் கொண்டிருக்கிறது.


ராமகிருஷ்ணன்
செப் 18, 2025 10:31

விடியாத விடியல் அரசு திறனற்ற, செயலற்ற 550 டூபாகூர் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசு, வெக்கங்கெட்ட வெத்து விளம்பர ஆட்சி செய்யும் அரசு, தன்னை தானே டிஸ்மிஸ் செய்து கொண்டு கட்சியை கலைத்துவிட்டு போக வேண்டும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 18, 2025 08:40

வெற்று அறிவிப்புகள் 256. அரசாணை பிறப்பிக்க காத்திருக்கும் திட்டங்கள் 381. அரசாணை பிறப்பித்தும் துவங்காத திட்டங்கள் 1061. வேலைகள் துவங்கி இன்னும் நடைமுறைக்கு வராத திட்டங்கள் 3455. ஆக... ஆக... மொத்தம் 5,153 திட்டங்களும் பனால். தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாய் மீண்டும் உங்களிடமே வந்து சேர்வேன். என்னால் பயன் ஒன்றும் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாதவரை என் காட்டில் மழைதான். திராவிட மாடல் என்பது இதுதான். வாழ்க டாஸ்மாக் மட்டை தமிழன்.


ديفيد رافائيل
செப் 18, 2025 07:22

சில நேரங்களில் சட்டமன்றக் கூட்டங்கள் பயனுள்ளதாக இல்லாதது போல் தோன்றலாம். ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு, பிறகு அதைச் செயல்படுத்த முடியவில்லை என்று கைவிடுவது, நிச்சயமாக மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். திட்டங்கள் கைவிடப்படுவது வருந்தத்தக்கது என்றாலும், இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாகப் பேசவும், எதிர்காலத்தில் சரியான திட்டமிடலுடன் செயல்படவும் சட்டமன்றம் ஒரு தளமாக இருக்க வேண்டும்.


ديفيد رافائيل
செப் 18, 2025 07:10

எப்படியோ மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதுக்கு எதுக்காக சட்டமன்ற கூட்டத்தை நடத்தனும்.


சாமானியன்
செப் 18, 2025 07:03

மிக மிக மோசமான ஆட்சி. முதல்வர் தற்கொலை செய்து கொள்ளட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை