உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றவாளி மொபைலில் ஆபாச வீடியோ: முழுமையாக ஆய்வு செய்ய முடிவு

குற்றவாளி மொபைலில் ஆபாச வீடியோ: முழுமையாக ஆய்வு செய்ய முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கைதான, ஞானசேகரனின் மொபைல் போனில், 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு மூன்று மனைவியர் என்பதும், அதில் ஒருவர் அண்ணா பல்கலை கேன்டீனில் பணியாற்றியதும் தெரிய வந்துள்ளது. அவரை பார்க்க அடிக்கடி பல்கலைக்கு சென்றுள்ளார். அப்போது, மாணவியரை நோட்டமிட்டு அவர்களை வீடியோ எடுத்துள்ளார். அவரது மொபைல் போனில், ஏராளமான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.இது குறித்து போலீசார் கூறியதாவது:ஞானசேகரின் மொபைல் போனில், இணையதளத்தில் இருக்கும் ஆபாச வீடியோ மற்றும் அவரது தனிப்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன. பல்கலை வளாகத்தில், மாணவியரை தவறான கண்ணோட்டத்தில் எடுத்த வீடியோ என, 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. அவரது மொபைல் போனில் இருந்து, வேறு யாருக்காவது ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளதா, எந்த மாதிரியான வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களில், அவரது மொபைல் போனில் இருந்து மற்றவர்களுக்கும், மற்றவர்களிடமிருந்து அவருக்கும் பகிரப்பட்ட வீடியோ, போட்டோ மற்றும் அவரது 'வாட்ஸாப்' குறுஞ்செய்தி உள்ளிட்டவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவரது, 'வாட்ஸாப் வாய்ஸ் கால்' மற்றும், 'வீடியோ கால்' யாருக்கெல்லாம் அதிகம் சென்றது என்றும் விசாரிக்கப்படுகிறது.ஞானசேகரனை ஐந்து நாட்கள், காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு, முழு விபரம் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

N.Purushothaman
டிச 28, 2024 10:55

அண்ணா பெயரை நாறடிச்ச உடன்பிறப்பு .....விளங்கிடும் .....காமசேகரனிடம் ஓசி பிரியாணி வாங்கி தின்ன கும்பல் யாருன்னு பாருங்க ....


Venkateswaran Rajaram
டிச 28, 2024 10:35

இவனுடைய மெயின் எடுத்துவிடவேண்டும்


அப்பாவி
டிச 28, 2024 10:24

என்ன ஆபாச வீடியோ ஆய்வு? இவிங்களும் அதைப் பாத்து ஆனந்தப் படுவாங்க.


K.ANBARASAN
டிச 28, 2024 12:44

குபீரென்று சிரித்து விட்டேன்


Kumaravelan
டிச 28, 2024 10:04

தமிழக காவல்துறை விசாரிப்பதால் எந்தவித பயனும் இல்லை


sankaranarayanan
டிச 28, 2024 09:54

இந்த திராவிட ஆட்சியில் இதெல்லாமே சகஜமப்பா இதொன்றும் புதிது அல்ல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஆங்காகே திராவிட நாட்டில் நடந்து அரங்கேறி கொண்டுதான் இருக்கும் என்பதுதான் அரசின் விளக்கம்


RAMAKRISHNAN NATESAN
டிச 28, 2024 08:47

எதிர்காலத்துல திராவிட மாடல் கோட்பாட்டின்படி முந்திரியா வந்திருக்க வேண்டிய பறவையை சிறகொடிச்சிட்டீங்களே .....


Kasimani Baskaran
டிச 28, 2024 08:44

பத்து வருடமாக இது போல எத்தனை பெண்களை நாசம் செய்தானோ..


கண்ணா
டிச 28, 2024 08:19

இந்த நிகழ்வை திசை திருப்பவே இந்த விசாரணை......இதுவும் பொள்ளாச்சி போல ஊத்தி மூட வாய்ப்பு உள்ளது. தமிழக காவல்துறை இப்போது திமுக காவின் காவல்துறையால் தான் செயல்படுகிறது என்றுதான் எண்ண தோன்றுகிறது


Raj
டிச 28, 2024 08:15

குற்றவாளியின் மொபைலில் ஆபாச வீடியோ தான் அப்புறம் என்ன கோவில் அர்ச்சனை வீடியோவா இருக்கும்... அந்த வீடியோவை அழித்து குற்றவாளியை தப்பிக்க விடாதீர்கள்.....


சிட்டுக்குருவி
டிச 28, 2024 08:10

இதுமாதிரி ஆபத்து சமயங்களில் உதவுவதற்ற்குத்தான் அவசர போலீஸ் எண் 100 உள்ளது.ஏன் மக்கள் இதை பயன்படுத்துவது இல்லை.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.1௦௦ எண்ணை எல்லோரும் ஃபோனில் பதிவு செய்துகொள்ளவேண்டும்.போலீஸ் டிபார்ட்மெண்ட் ஆட்டோமேட்டிக் மெசேஜ் மாதம் ஒருமுறை எல்லா போன நும்பெருக்கும் அனுப்பவேண்டும்.இதைபயன்படுதினால் குற்றங்களை தடுக்கலாம்.