உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழர்கள் குறித்து அவதூறு: மத்திய அமைச்சர் கோரிக்கை; நீதிமன்றம் மறுப்பு

தமிழர்கள் குறித்து அவதூறு: மத்திய அமைச்சர் கோரிக்கை; நீதிமன்றம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புப்படுத்தி பேசிய விவகாரத்தில் மத்திய பெண் இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.லோக்சபா தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்கிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தைக் குறிப்பிட்டு தமிழகத்தில் பயிற்சி பெற்று வருபவர்கள் இங்கு குண்டு வைக்கின்றனர் எனக்கூறினார். இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து ஷோபா கரந்த்லாஜே சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தி.மு.க.,வினர் அளித்த புகாரின் அடிப்படையில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா கரந்த்லாஜே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது தமிழர்களை நான் அவதூறாக பேசவில்லை. என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக்கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குண்டு வைத்த நபர் தமிழகத்தில் பயிற்சி எடுத்தது முன்னதாகவே தெரிந்திருந்தால், பொறுப்பான குடிமகன் என்ற முறையில் போலீசாருக்கு தகவல் அளித்திருக்க வேண்டும் எனக்கூறி வழக்கின் விசாரணையை நாளை மறுதினம்( ஜூலை 12) ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
ஜூலை 11, 2024 12:12

தமிழர்களை அவமானப்படுத்திய இவரை விட இவருக்கு வக்காலத்து வாங்கும் சங்கிகளைப் பார்க்கும்போது தான் கோபம் அதிகமாக வருகிறது! என்ன கேடுகெட்ட ஜென்மங்களோ?


sridhar
ஜூலை 11, 2024 06:21

அதே நீதிமன்றங்கள் உதயநிதி விஷயத்தில் மட்டும் எப்படி வேறு அளவுகோல் கொண்டு அளக்கிறது


U
ஜூலை 10, 2024 21:42

super


இராம தாசன்
ஜூலை 10, 2024 21:03

இந்துக்களை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் - ஆனால் பிற மதத்தவர்களை சொன்னால் உடனே சட்டம் தன் கடமையை செய்யும் கேட்காமலே. அதே போல தமிழர்களை திராவிட கட்சி தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் - ஆனால் வேறு யாரும் சொல்லக்கூடாது - அது தான் திராவிட மாடல்


T.sthivinayagam
ஜூலை 10, 2024 20:21

தமிழர்களை எவ்வளவு திட்டினாலும் தமிழகத்தில் உள்ள அதிமேதாவிகள் அமைச்சருக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் மக்கள் கூறுகின்றனர்


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 10, 2024 19:58

குண்டு வெடிப்பிக்கான திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது என்று விசாரணை சொல்கிறது. அது உண்மைதானே பிறகு ஏன் நீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்யவில்லை? ஹிந்துக்களை கேவலமாக பேசிய பாதிரி இன்னும் வெளியில் தான் சுற்றுகிறான்.


Narayanan Muthu
ஜூலை 10, 2024 19:55

வழியில அசிங்கம் பண்ணிட்டு வாரி கொட்ட மெனக்கெடுது. என்னத்த சொல்ல


தமிழ்வேள்
ஜூலை 10, 2024 19:54

அமைச்சர் கூற்றில் என்ன தவறு? கள்ள சாராயம் காய்ச்சும்/விற்கும் உபி எல்லாம் பயலும் அக்மார்க் தமிழன் மட்டுமே.. குண்டு வைத்த மார்க்க மூர்க்கம் களுக்கு கமுக்கமாக உதவியதும் தமிழக திராவிட கும்பல் மட்டுமே... உள்ளது சொன்னால் நோப்பாளம் ஏன் வருகிறது? வெடிகுண்டை சிலிண்டர் வெடிப்பு என்று பொய் சொல்லி திசைதிருப்பும் வேலையும் உதவி தானே? அறம் பிறழ்ந்து திமுகவுக்கு குடை பிடித்து கூவும் தமிழனுக்கு இந்த அம்மாவை விமர்சிக்க, குற்றம் சாட்ட தகுதியே கிடையாது


Ramesh Sargam
ஜூலை 10, 2024 19:44

ஷோபாவின் sondha வாழ்க்கையை kilarinaal ரொம்ப naaththam அடிக்கும். வேண்டாம் ஷோபா.


Dharmavaan
ஜூலை 10, 2024 19:21

நாட்டில் கேவலமான நீதி ஆளுக்கேற்ற நீதி .பொது சேவையில் உள்ளவர் என்றால் முறையை தன சந்தேகத்தை சொன்னார். இதில் என்ன பெரிய குற்றம் திமுக பேச்சிற்கு இது போன்ற நிலையை நீதி எடுக்குமா பாரபட்சமான நீதி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை