டாஸ்மாக் மூட வலியுறுத்தல்
சென்னை:தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்கிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், கன மழை பெய்வதால், அம்மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.இது குறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறுகையில், ''பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து வசதிகள் தடைபட்டுஉள்ளன. ''எனவே, மதுக்கடைகளின் நிலைமைக்கேற்ப, மாவட்ட மேலாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும்,'' என்றார்.