இழிவுபடுத்தும் பதிவுகள் தமிழிசை வேதனை
கடலுார்: வழக்கு ஒன்றில் ஆஜராக, கடலுாருக்கு வந்த தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை அளித்த பேட்டி: நான், பா.ஜ., மாநில தலைவராக 2017ல் இருந்தபோது, முகநுால் பக்கத்தில் தவறான வார்த்தைகளால் வி.சி., கட்சியைச் சேர்ந்த பிரமுகர் பதிவு செய்திருந்தார். இது தொடர்பான வழக்கில் ஆஜராக கடலுார் வந்தேன். இதுபோன்ற பதிவுகள், பெண்களை இழிவுபடுத்துவதோடு அரசியலுக்கு வரும் அவர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும். அவர்களின் குடும்பத்தை சார்ந்தோருக்கு தலைகுனிவை ஏற்படுத்தும். தமிழகத்தில், மாற்று கட்சியினரை எதிர்க்கட்சி என்று பார்க்காமல், எதிரி கட்சி போல் பார்க்கின்றனர். இவ்வாறு கூறினார்.