உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீரழிந்த அரசு பள்ளிகள்: நாகேந்திரன் விமர்சனம்

சீரழிந்த அரசு பள்ளிகள்: நாகேந்திரன் விமர்சனம்

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை: திருப்பத்துார் மேல்சாணங்குப்பம் அரசு துவக்கப் பள்ளியில், மது போதையில், ஐந்தாம் வகுப்பு மாணவியிடம், தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும், அந்த தலைமை ஆசிரியர் தொடர்ந்து, நான்கு பள்ளிகளில் பாலியல் புகாரில் சிக்கி, இடமாற்றம் செய்யப்பட்டு, 15 நாட்களுக்குள், மீண்டும் இக்குற்றத்தில் ஈடுபட்டிருப்பது, தி.மு.க., ஆட்சியில் அரசு பள்ளிகள் சீரழிந்துள்ளதை காட்டுகிறது. இதுபோன்ற குற்றங்கள் வெளிவரும் போதெல்லாம், கண் துடைப்புக்காக, கைது செய்து விட்டு, 'பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும்' என முழங்குகின்றனர். பின், அந்த செய்தி அடங்கியதும் குற்றம் புரிந்த ஆசிரியரை வேறு கல்வி நிலையத்துக்கு இடமாற்றம் செய்து, மாணவர்களின் பாதுகாப்பை பலியிடுவது தான், பள்ளிக்கல்வித் துறையின் பொற்காலமா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை