உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக சிறைகளில் கூடுதல் விலைக்கு உணவுப்பொருள் வாங்கியதில் ஆண்டுதோறும் ரூ.30 கோடி முறைகேடு

தமிழக சிறைகளில் கூடுதல் விலைக்கு உணவுப்பொருள் வாங்கியதில் ஆண்டுதோறும் ரூ.30 கோடி முறைகேடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழக சிறைகளில் கைதிகளுக்கு வழங்குவதற்காக வாங்கப்படும் உணவுப்பொருட்களை, கூடுதல் விலைக்கு வாங்கியதாக பில் தயாரித்து கொடுத்து ஆண்டுதோறும் ரூ.30 கோடி வரை முறைகேடு செய்ததை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் கண்டுபிடித்தார். இதன்காரணமாக மீண்டும் அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டகசாலையில் பொருட்கள் வாங்க உத்தரவிட்டார்.சிறை கைதிகளுக்கு தினமும் 3 வேளை உணவு, வாரம் இருமுறை சிக்கன் போன்றவை வழங்கப்படுகிறது. இதற்கான உணவுப்பொருட்கள் அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டக சாலைகளில் வாங்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு பனைமரம் மற்றும் நார் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு கூட்டமைப்பு (டி.என்.பி.எப்.எம்.சி.எப்.) மூலம் உணவுப்பொருட்களை கொள்முதல் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டது. கடந்த மாதம் வரை பொருட்கள் வாங்கியதில் சிறைத்துறையில் ஆண்டுதோறும் ரூ.30 கோடி முறைகேடு நடந்தது டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.உதாரணமாக ஒரு தேங்காய் விலை ரூ.15 எனில், சிறை நிர்வாகத்திற்கு ரூ.45க்கு தரப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது. இப்படி சந்தை விலையை விட ஒவ்வொரு பொருட்களின் விலையும் கற்பனை செய்ய முடியாத வகையில் விலை நிர்ணயிக்கப்பட்டு அரசிடம் இருந்து தொகை பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் கைதிகளுக்கு தினமும் உணவுப்பொருட்கள் வழங்க கூடுதல் விலைக்கு வாங்கியதாக கணக்கு காண்பிக்கப்பட்டு கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது.டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கைதிகளுக்கு சிக்கன் வழங்க, கூடுதல் விலைக்கு இறைச்சி வாங்கப்பட்டதை அறிந்த டி.ஜி.பி., முறைகேட்டை தவிர்க்க உடனடியாக அனைத்து மத்திய சிறைகளிலும் சொந்தமாக கோழி பண்ணை அமைக்க உத்தரவிட்டார். அதேபோல் உணவுப்பொருட்கள் கொள்முதல் செய்தலில் முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாக பெண் அலுவலர் உள்ளிட்ட சிலரை 'சஸ்பெண்ட்' செய்தார்.தமிழ்நாடு பனைமரம் மற்றும் நார் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் அன்றாட பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்படுவதில்லை. பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் மட்டும் வாங்கப்படுகின்றன. மற்றவை அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை மூலம் வாங்கிக்கொள்ளுமாறு கூறுகின்றனர். அதற்கான பில்லை டி.என்.பி.எப்.எம்.சி.எப்.க்கு அனுப்பினால் அவர்கள் குறிப்பிட்ட சதவீதத்தில் விலையை நிர்ணயித்து அரசுக்கு அனுப்பி தொகையை பெற்றனர். இதன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள், கூடுதல் விலைக்கு பொருட்கள் வாங்குவதை தவிர்க்க பழைய முறைபடி கூட்டுறவு பதிவாளரால் நிர்வகிக்கப்படும் அந்தந்த மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை மூலம் வாங்க உத்தரவிட்டார் என்றனர்.

இப்படி ஒவ்வொரு பொருட்களின் விலையும் சந்தை மதிப்பைவிட 200 சதவீதத்திற்கு மேல் நிர்ணயித்து அரசிடம் தொகை பெற்று மோசடி நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

N Srinivasan
மே 06, 2025 13:19

வேறு என்ன பண்ணுவது பல பிரபலங்களை உள்ளே கொண்டு வந்து விட்டால் அவர்களுக்கு தேவையான உயர்ரக உணவுகளை வாங்கித்தான் தரவேண்டும். அதற்கு காசு வேண்டுமே. கஜினி முகமத் மாத்தி ஒருத்தர் ஜாமீன் வாங்க பல கோடிகளை அரசு செலவு செய்தது சாப்பாடு விஷயம்தானே தொலைந்து போகட்டும்


ராமகிருஷ்ணன்
மே 06, 2025 11:08

விடியலின் ஆட்சியில் முறைகேடுகள் செய்யாமல் வாழவே முடியாது. ஊழல் லஞ்சம் தான் விடியல் ஆட்சிக்கு அழகு


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 06, 2025 11:03

திராவிடர்களுக்கு கொள்ளையடிக்க உரிமையில்லையா ?


RAMESH
மே 06, 2025 10:22

சட்ட அமைச்சர் ரகுபதி இந்ந ஊழலுக்கு பதில் சொல்வாரா.... இல்லை பதவி விலகுவாரா....... இல்லை என்னிடம் சொல்லி விட்டா வாங்குறாங்க என்று உருட்டுவாரா


S.V.Srinivasan
மே 06, 2025 09:51

சிறை துறையில் இருந்து முறைகேடு செய்யும் இவர்களை எந்த சிறையில் அடைப்பது???


Yes your honor
மே 06, 2025 09:37

ஆகமொத்தம் அடுத்து சிறைத்துறை மந்திரியும் விசாரணை வளையத்தில். எந்தக் கொம்பனாலும் குறைசொல்லமுடியாத ஆட்சி சந்தி சிரிக்கின்றது.


Sampath
மே 06, 2025 09:11

சிறை துறை தலைவர் மாற்றப்படுவார்


Anbuselvan
மே 06, 2025 09:08

திராவிட மாடல்


raja
மே 06, 2025 08:05

ஓங்கோல் கோவால் புர திருட்டு திராவிடன் ....


GMM
மே 06, 2025 07:28

அரசுக்கு தேவையான பொருட்கள் அரசு நிறுவனம், கூட்டுறவு கடைகளில் மட்டும் வாங்க வேண்டும். இல்லாத பொருளை திறந்த வெளி சந்தையில் வாங்கும் முன் மத்திய புள்ளியியல் துறையிடம் கொள்முதல் விலை விவரம் பெற வேண்டும். எந்த அதிகாரிக்கும் வீட்டிற்கு பலசரக்கு வாங்குவது போல் இஷ்ட விலைக்கு வெளி சந்தையில் வாங்க அதிகாரம் இல்லை. தவறிய ஊழியர் சம்பளம், சொத்தில் வசூலிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை