உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் 39பேர் பலி குறித்து பொறுப்பு டி.ஜி.பி., விளக்கம்

கரூர் 39பேர் பலி குறித்து பொறுப்பு டி.ஜி.பி., விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் விளக்கம் அளித்தார்.

டி.ஜி.பி., கூறியதாவது:

த.வெ.க.,வினார் கரூர் பரப்புரைக்கு முதலில் அனுமதி கேட்ட இரு இடங்களும் மிகவும் குறுகலானது. அதனால் அதைவிட பெரிய இடத்தில் காவல்துறை அனுமதி கொடுத்தது.பரப்புரைக்கு விஜய் வர தாமதமானதால் அதிகமானோர் கூடிவிட்டனர்.தொண்டர்கள் 10,000பேர் கூடுவார்கள் என த.வெ.க.,வினர் அனுமதி கேட்டனர். ஆனால் 27,000பேர் கூடிவிட்டனர். விஜய் பரப்புரையில் காவல்துறையினர் 500பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நாமக்கலிலும் இதே அளவு கூட்டம் கூடியது. போலீஸ் பாதுகாப்பு கொடுத்தோம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு ஒருநபர் விசாரணை கமிஷனுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவி்த்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி