உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனுஷ்கோடி நீர் பிடிப்பு கரையில் நுரைக்குவியல் மீன்கள் உயிரிழக்கும் அபாயம்

தனுஷ்கோடி நீர் பிடிப்பு கரையில் நுரைக்குவியல் மீன்கள் உயிரிழக்கும் அபாயம்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் நீர் பிடிப்பு கரையில் ஒதுங்கும் நுரைக் குவியலால் சிறுமீன்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.நவ. முதல் ஜன., வரை பெய்த மழையால் கோதண்ட ராமர் கோயில் சுற்றி வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் மழை நீருடன் கடல்நீரும் சேர்ந்து தேங்கியுள்ளது. இதனுள் சிறிய ரக நண்டுகள், மீன் குஞ்சுகள் வசிக்கும். இதனை வெளிநாடு பறவையான பிளமிங்கோ, கடல் புறா, கொக்குகள் உட்கொள்ளும்.பல ஏக்கரில் உள்ள இந்த நீர் பிடிப்பு பகுதி கரையில் சில நாட்களாக நுரைக்குவியல் ஒதுங்கி கிடக்கிறது. இதில் ரசாயனம் கலந்துள்ளதா அல்லது சுட்டெரிக்கும் வெயிலில் வேதிவினை ஏற்பட்டு நுரை ஒதுங்குகிறதா என மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர். இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால், மீன்வளம் பாதிப்பு ஏற்படும். நுரை குறித்து மீன்துறை மற்றும் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் பரிசோதிக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி