உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படும் என மிரட்டி 40 தொகுதியில் வெற்றி: தி.மு.க., மீது தினகரன் சாடல்

மகளிர் உரிமை தொகை நிறுத்தப்படும் என மிரட்டி 40 தொகுதியில் வெற்றி: தி.மு.க., மீது தினகரன் சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மானாமதுரை : ''லோக்சபா தேர்தலில் மகளிர் உரிமை தொகையை நிறுத்தி விடுவோம் என வாக்காளர்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் தான் தி.மு.க., கூட்டணி 40 இடங்களில் வென்றது,'' என, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் சாடினார்.அவர் கூறியதாவது: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகம், பணத்தை கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கும் முயற்சியை தேசிய ஜனநாயக கூட்டணியினர் தடுத்து பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை வெற்றி பெற முயற்சிப்போம். இடைத்தேர்தலில் அ.தி.மு.க., பயந்து பின்வாங்கியுள்ளது.கடந்த ஐந்தாண்டுகளாக 37 எம்.பி.,க்கள் இருந்தும் தமிழக பிரச்னைகளை தி.மு.க., கூட்டணி சரி செய்ய முடிந்ததா. தமிழகத்தில் தி.மு.க.,வுடன் கூட்டணியில் உள்ள காங்., கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. தமிழகத்தின் முக்கியமான காவிரி பிரச்னையை தீர்க்க முடிந்ததா. மேகதாதுவில் அணை கட்டுவோம் என அம்மாநிலம் கூறி வருகிறது. இதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். தமிழகத்தில் ஓட்டுக்களை வாங்க காங்.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறார் ஸ்டாலின். 40 தொகுதிகளிலும் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. இது நேர்மையான வெற்றி கிடையாது.2026 சட்டசபை தேர்தலில் இதுபோன்று நடக்க வாய்ப்பில்லை. 2011 ல் தி.மு.க., மண்ணை கவ்வியதுபோன்றே, 2026 தேர்தலில் நடக்கும். லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வின் 'பி' அணியாக செயல்பட்ட அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி, தோல்வி பயத்தால் தான் இடைதேர்தலில் நிற்கவில்லை. தென் மாவட்ட 9 தொகுதிகளில் அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் சரிந்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
ஜூன் 18, 2024 17:16

அடடே, இவர் கூட தமிழக பாஜக கட்சித் தலைவர்கள் போல் அபத்தமாக பேச ஆரம்பித்து விட்டாரே!


Mario
ஜூன் 18, 2024 09:21

இல்லைன்னா இவரு கிழிச்சு தொங்கவிட்டுருப்பாரு....பாவம்


Sampath Kumar
ஜூன் 18, 2024 09:04

புழுத்து போன பொய் உங்க கட்சி காணமல் பொய் கொண்டு உள்ளது கடைசி முடிவுரை நீக்க வந்து ஏழுதுங்க அய்யொ பாவம் எம் ஜி ஆர் கட்சி ஆத்தா கட்சி இப்போ பழனி கட்சி பொன்னேர் கட்சி தினகரன் கட்சி அப்புறம் சசி கட்சி என்று நிலைமை போய்க்கொண்டு உள்ளது அம்புட்டு பயலுகளும் அண்ணா திமுக கரணை சொன்னேன் கொதித்து பொய் என்ன செய்வது என்று குழம்பி கொண்டு இருக்கான் நீங்க வந்து புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்


arul raj
ஜூன் 18, 2024 09:01

இந்த எலக்சன் எதற்காக நடக்கிறது என்று கூட பெரும்பகுதி கிராம மக்களுக்கு தெரியாது. ஆயிரம் ரூபாய் நிறுத்தப்படும் என்றுதான் மிரட்டி போட்டு வாங்கினார்கள்


ராமகிருஷ்ணன்
ஜூன் 18, 2024 06:23

திமுக மிரட்டினா ஓட்டு போடும் மக்களுக்கு புத்தி இல்லையா. அதுசரி 20 ரூபாய் டோக்கன் அதை குத்தமா சொல்லுறது பாருங்க, எவ்வளவு கொடுமை. மக்களிடம் மாற்றம் வரணும்.


Nellai Baskar
ஜூன் 18, 2024 04:27

மிகவும் உண்மையான அறிக்கை. எங்கள் சொந்த ஊரிலேயே இது நடந்தது


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி