| ADDED : ஆக 31, 2011 11:59 PM
திருச்சுழி : திருச்சுழி அருகே, வேன் கவிழ்ந்ததில், இருவர் பலியாயினர்; 13 பேர் காயமடைந்தனர் . விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே இலுப்பைகுளம், மிதிலைகுளம், இனக்கநேரி கிராமங்களை சேர்ந்தவர்கள், மதுரையில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு, டாடா 407 வேனில், நேற்று திரும்பினர். வேனில் 33 பேர் பயணம் செய்த நிலையில், பிற்பகல் 2.30 மணிக்கு, திருச்சுழி குச்சம்பட்டி புதூர் அருகே, நிலை தடுமாறி வேன் கவிழ்ந்தது. இலுப்பைகுளம் பிச்சையம்மாள்,60, சம்பவ இடத்திலேயும், மிதிலைகுளம் முனியாண்டி மகன் சக்திவேல், 10, மருத்துவமனை கொண்டு வரும் வழியிலும் இறந்தனர். காயமடைந்த 13 பேர், அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.