உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுப்பதிவு இயந்திர அறையில் டிஸ்ப்ளே கோளாறு: ஈரோடு கலெக்டர் விளக்கம்

ஓட்டுப்பதிவு இயந்திர அறையில் டிஸ்ப்ளே கோளாறு: ஈரோடு கலெக்டர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என எழுந்த புகாருக்கு, 'ஓட்டுப்பதிவு இயந்திர அறையில் வைக்கப்பட்டுள்ள டிஸ்ப்ளே தான் கோளாறு, சிசிடிவி கேமராக்கள் பழுது ஏதுமின்றி செயல்பட்டது'' என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விளக்கமளித்தார்.நீலகிரியில் சமீபத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் எழுந்தது. அடுத்த ஓரிரு நாளில் ஈரோடு தொகுதியிலும் இதே பிரச்னை எழுந்தது. சித்தோடு அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் சிறிது நேரம் இயங்கவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m9pwwcbb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அளித்த விளக்கம்: சித்தோடு அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்க்கு வரும் சிசிடிவி ஒயர் இணைப்பில் பழுது ஏற்பட்டது. இதனால் அங்கு வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் டிஸ்ப்ளே தெரியவில்லை. தொழில்நுட்ப கோளாறால் காலை 7 மணி அளவில் பழுது ஏற்பட்ட நிலையில் 9 மணிக்கு சரிசெய்யப்பட்டது. சிசிடிவி கேமராக்கள் பழுது ஏதுமின்றி செயல்பட்டது; டிஸ்ப்ளே மட்டும் தான் தெரியவில்லை. இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 30, 2024 16:12

எல்லாம் உளவுத்துறை வேலையாக இருக்கும் ரேண்டம் செலக்சனில் இயந்திரங்கள் பிரித்து எவ்வளவு ஓட்டு ஆளும் திமுகவிற்கு விழுந்துள்ளது என பார்த்து முதல்வருக்கு ரிப்போர்ட் கொடுக்க தான் இது செய்திருப்பார்கள் இதன் பின்னர் திமுகவிடமிருந்து எந்த ரியாக்ஷன் வராததை பார்த்தால் கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு எதிரான ஓட்டுகள் அதிகம் விழுந்திருக்க வாய்ப்பு உண்டு


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ