உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தரமற்ற அரசு கட்டுமானம்; கட்டி ஓராண்டு மட்டுமே ஆச்சு; தொட்டாலே உதிர்ந்து விழும் பூச்சு!

தரமற்ற அரசு கட்டுமானம்; கட்டி ஓராண்டு மட்டுமே ஆச்சு; தொட்டாலே உதிர்ந்து விழும் பூச்சு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மூலக்கொத்தளத்தில் 138.29 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நகர்ப்புற வாரிய குடியிருப்புகள், திறப்பு விழா கண்ட ஒரே ஆண்டில், தொட்டால் உதிர்வதாகவும், மோசமான நிலையில் கட்டடம் மற்றும் கட்டமைப்புகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டி, குடியிருப்புவாசிகள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.ராயபுரம் மண்டலத்தில், மூலக்கொத்தளம் சுடுகாடை ஒட்டி உள்ள ராம்தாஸ் நகர், பிரிவில் தோட்டம் பகுதியில், 200க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வசித்தனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அதே இடத்தில் வீடு கட்டித்தர வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மூலக்கொத்தளம் சுடுகாடிற்கு, 35 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், மயானத்திற்கான 23 ஏக்கர் நிலம் போக, காலியாக இருந்த 12 ஏக்கர் நிலத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 138.29 கோடி ரூபாய் செலவில், 13 மாடியில் 1,044 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

சி.எம்.டி.ஏ., அனுமதி

கடந்த 2018ல், அ.தி.மு.க., ஆட்சியில், 138 கோடியில் துவக்கப்பட்ட இப்பணி, 2020ல் முடிந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ., கட்டடத்திற்கு குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்பு வழங்காததால், வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இரண்டு ஆண்டுகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ., அனுமதி பெறப்பட்டது. குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்புகள், மின்துாக்கி, சுற்றுச்சுவர் வசதிகள் செய்யப்பட்டன. இந்த கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் 2023 ஜூலையில் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.அப்போது திறக்கப்பட்ட குடியிருப்பில், தொகை அதிகமாக செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறி, ராமதாஸ் நகர், பிரிவில் தோட்டத்தில் வசித்தவர்கள் செல்ல மறுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்பில் ஒவ்வொரு பயனாளிக்கும் வசூலிக்கும் 4.70 லட்சம் ரூபாய்க்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும், அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே தங்களால் வழங்க முடியும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். அதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஏற்றது.

குற்றச்சாட்டு

இதையடுத்து, ராம்தாஸ் நகர், பிரிவில் தோட்டம் பகுதிவாசிகள், 335 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் தற்போது, 'ஜி, ஹெச் மற்றும் ஐ' பிளாக்குகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திறப்பு விழா கண்ட ஓராண்டிலேயே, கையால் தொட்டாலே உதிரும் அளவிற்கு சிமென்ட் பூச்சு நிலை மாறியுள்ளது. பி.வி.சி.,யில் போடப்பட்ட ஜன்னல், கதவுகள் உடைந்துள்ளன. பல வீடுகளில் கதவுகளே பொருத்தப்படவில்லை.அதுமட்டுமல்லாமல் கசியும் மழைநீர், கண்டமேனிக்கு தொங்கும் மின் ஒயர்கள், பழுதடைந்த 'லிப்ட்' என, குடியிருப்பின் நிலை மோசமாக மாறியுள்ளது. கட்டடத்தின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது. ஒரு 'பிளாக்'கிற்கு இரண்டு 'லிப்ட்' உள்ளது. அதில், ஒரு 'லிப்ட்' மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதில் நான்கு பேருக்கு மேல் ஏறினால் 'லிப்ட்' அறுந்து விழுந்து விடும் என, ஆப்பரேட்டர்கள் எச்சரிப்பதாக குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.இதனால் குடியிருப்புவாசிகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டனர். விரைந்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும், வீடுகளின் தரத்தின் மீது நம்பிக்கை இல்லாததால், ஐ.ஐ.டி., அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அப்போது, வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரசம் பேசியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.மின்சாரம், குடிநீர், கதவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. 'லிப்ட்' இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை. குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. கீழே இருந்து 4, 5 மாடிகளுக்கு ஏறி குடங்களில் தண்ணீர் கொண்டு செல்கிறோம். மேல்தளத்தில் ஓட்டை விழுந்து கீழ் தளத்தை பார்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. உயிர் பயத்துடனேயே வாழ வேண்டிய நிலை உள்ளது.ஆர்.ராஜசேகர், 40, குடியிருப்புவாசி.சான்றிதழ் இல்லாததால் வீடுகள் தர மறுப்புஇது குறித்து மூலக்கொத்தளம், பிரிவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த டி.அம்மு, 48, கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கிறேன். 30 ஆண்டுகளுக்கு முன் கணவர் பிரிந்து சென்றார். கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் வாங்க முடியாததால் வீடு கிடைக்கவில்லை. பல துறைகளில் அலைந்தும் சான்றிதழ் வாங்க முடியவில்லை. இதுபோல விதவை சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் இல்லாததால், 50க்கு மேற்பட்டோருக்கு வீடு ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைந்து வீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்டடத்தை அசைக்கவே முடியாது'

இது குறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி கூறியதாவது: மூலக்கொத்தளம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், லிப்டின் கதவு, கேபிள், ஸ்பிரிங், மீட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து, உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன.கடந்த வாரம் மூன்று தளங்களின் ஒயர்களை, திருடிச் சென்றுள்ளனர். குடியிருப்புவாசிகளே இதில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வீடியோ பதிவும் உள்ளது. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஒரு வீட்டில் வசிப்போர் இரண்டு, மூன்று வீடுகளை கேட்டு விண்ணப்பிக்கின்றனர். ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே கிடைக்க வேண்டும் என, விசாரணை நடத்தி வீடுகள் ஒப்படைக்கிறோம். மூலக்கொத்தளம் குடியிருப்பு கட்டடத்தில் பூச்சு வேலை கிடையாது. மைவான் தொழில் நுட்பத்தில் கட்டப்பட்ட கான்கிரீட் கட்டடம். இது தெரியாமல் உதிர்கிறது; கொட்டுகிறது எனக் கூறுகின்றனர். இந்த கட்டடத்தை அசைக்கவே முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

nv
அக் 27, 2024 12:13

திருட்டு திராவிட இலட்சணம்.. இரண்டு திராவிட கட்சிகளும் ஊழல்வாத குப்பைகள்.. இவர்களை அகற்றவில்லை எனில் தமிழ்நாடு உருப்படாது


N.Purushothaman
அக் 27, 2024 07:30

தமிழகத்தில் ஜனநாயகம் என்பது மக்களை சுரண்ட ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ள அதிகாரமாக மாறி பல மாமாங்கம் ஆயிடுச்சி ....அதுவும் திருட்டு திராவிடனுக்கோ அதிகாரம் கைக்கு வந்ததில் இருந்து சுரண்டுவதை ஓவர் டயம் போட்டு பண்ணிக்கிட்டு இருக்கான் ....துவா ராத்தோஸ் வாலா அதுக்கும் முட்டு கொடுத்துக்கிட்டு இருக்கான் ....


மோகனசுந்தரம்
அக் 27, 2024 05:52

இந்த எட்டப்பன் உத்தமன் போல் பேசுகிறானே அவனுடைய ஆட்சியில் தானே இது கட்டப்பட்டது. இந்த இரண்டு திருட்டு திராவிட கட்சிகளும் கொள்ளை அடிப்பது என்பதை பாருங்கள். இந்த இரண்டு திருட்டு திராவிட அயோக்கிய கட்சிகளும் அழிந்தால் தான் தமிழகம் தலை நிமிரும்


Dhurvesh
அக் 27, 2024 03:07

அப்போ ஆரியம் கட்டிய சிவாஜி சிலை சுக்கு நூறு ஆச்சே வெட்கமா இல்லை இப்படி பேச


Kasimani Baskaran
அக் 26, 2024 18:20

திராவிடம் என்பது பொதுவாகவே திருடுவதை குறிக்கும். கட்டுமானத்தில் குறைபாடு இருந்தால் அது கொலை முயற்சியே. ஆகவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை தூக்கில் போடவேண்டும்.


Lion Drsekar
அக் 26, 2024 17:12

வாயில்லா பூச்சிகள் வரி கட்டுவதற்கு மட்டுமே வாழ்ந்து வரும் நிலையில். கேள்வி கேட்கவேண்டியவர்களும் அழிஞ்சிவிதைகள் போன்று மறத்தோடு ஒன்றிணைந்துவிடுவதால் வேறு வழி இல்லாமல் வாய்மூடி இருப்பதுதான் சிறந்தது, விளக்கவேண்டும் என்றால் அதே வரி, மன்னிக்கவும் ஆண்டுதோறும் வரி விதிப்பு அதிகமாகிக்கொண்டே போகும், அதற்க்கு ஏற்ப ஆண்டுதோறும் தரமற்ற என்று கூற முடியாது , இருந்தாலும் சாலை , கட்டிட பராமரிப்பு, குடிநீர் நிலைகளில் செடிகள் வளர்க்கப்பட்டு அதை அகற்ற டெண்டர் போட்டு அந்த சேடிகளை அகற்றுதல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் பொதுநல சேவை என்பது அள்ளி கொடுக்கும் கற்பக விருக்ஷம் . பல வீடியோக்கள் இன்னமும் சாட்சியாக இனைய காலத்தில் உள்ளன பூமிக்கு கீழே குழாய்கள் இருக்காது ஆனால் அடிபம்ப்பு மட்டும் புதைத்து சிமென்ட் பூசி இருப்பதை நாம் பார்க்கலாம், தரம் என்று ஒன்று இருந்தால் நாம் உலகநாடுகளில் முதல் நிலையில் இருந்திருப்போம் .இந்த நிலை சுதந்திரம் பெற்றதுமுதல் இன்றுவரை அசுரவளர்ச்சி பெற்று வருகிறது. ஹிரண்யாய நமஹ


Tetra
அக் 26, 2024 16:42

அன்னிக்கே விவேக் சொன்னார். 5 ரூபா பிரியாணி துன்னா காக்கா குரல் வராம உன்னிக்க்ருஷ்ணன் கொரலா வரும்னு. மாவீரன் படம் மாதிரியே இருக்குதேப்பா. எதுக்கும் யோகி பாபுவை அனுப்புங்கப்பா


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 26, 2024 11:15

பல மாநிலங்களிலும் இதே நிலைமைதான் .... பீகாரை விடுங்க ..... நம்மை விட பின்தங்கிய மாநிலமான மேற்கு வங்கத்தில் கூட இந்த அளவுக்கு நிலைமை மோசமில்லை .... எல்லாம் திராவிட மாடலின் மகத்துவம் ..... முன்னேறிய, அதுவும் முன்மாதிரி மாநிலத்தின் தலைநகரிலேயே இந்த நிலை ....... இதைச் சொன்னா பகோடாஸ், க்கொய்ங் ன்னு கொசுக்கள் வந்துரும் ..... அப்பப்ப தட்டிக்கிட்டு காலத்தை ஓட்ட வேண்டியதுதான் ....


Kumar Kumzi
அக் 26, 2024 16:14

குடும்ப கொத்தடிமையே நீ ஏன் மற்ற மாநிலங்களுக்கு போற அங்கேயா ஓட்டு போட்ட கூமுட்ட


Kumar Kumzi
அக் 26, 2024 11:15

விடியாத விடியலின் திராவிஷா மாடல் வேறு எப்படி இருக்கும் தராம முக்கியம் கல்லாவை நிரப்ப கமிஷன் தானே முக்கியம்


JAYARAMAN VIJAYALAKSHMI SUDHAKAR
அக் 26, 2024 16:56

ஐயா, இது கட்டிய வருடத்தை கவனியுங்கள் அப்புறம் திராவிட மாடல் அரசை குறை கூறுங்கள்.


N.Purushothaman
அக் 27, 2024 09:38

அப்போ எதிர்கட்சியா இருந்த தற்போதைய முதல்வர் எல்லாத்திலையும் அரசியல் பண்ணியவரு இதில் ஊழல் நடந்திருந்தால் வெளி கொண்டு வந்து இருக்கலாமே ...அதே போல 2023 ஆம் ஆண்டு திறந்து வச்சது ஏன் ? திருட்டு திராவிடனுங்க கட்சிகளுக்குள் இருந்த மறைமுக எழுதப்படாத ஒப்பந்தம் காரணமா ?


சமீபத்திய செய்தி