உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளி பண்டிகை கோலாகலம்: தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டிகை கோலாகலம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இன்று(அக்.,20) தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகவர்னர் ரவிதீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தீபாவளியன்று, இருள் மீதான ஒளியின் வெற்றி, தீமை மீதான நன்மையின் வெற்றி, அறியாமை மீதான ஞானத்தின் வெற்றியை கொண்டாடுகிறோம். இந்நாளில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளத்தை கடவுள் நல்கி அன்பு, கருணையால் வாழ்க்கையை நிரப்பட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியான துடிப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துகள். அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.அமமுக தினகரன்தீமையை ஒழித்து நீதியின் வெற்றியை நிரூபிக்கும் இந்த புனிதமான தீபாவளி பண்டிகையில் நாம் ஏற்றி வைக்கும் ஒளி அறியாமையை அகற்றி அதைக் கொண்டு வரட்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்.பாமக தலைவர் அன்புமணிஇருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்! இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழகத்திலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மணிமுருகன்
அக் 19, 2025 23:32

அருமை வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்களுக்கும் பாரதமக்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் தலைவர் ரஜினிகாந்த் சொந்தங்கள் அனைவருக்கும்அவர்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் தலைவர் ரஜினிகாந்த் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்தெரிவித்துக் கொள்கிறேன்


arumugam mathavan
அக் 19, 2025 22:42

மக்களிடம் ஓட்டு வாங்கி பதவியில் இருப்பவர்கள் வாழ்த்து கூறாத வரைக்கும் நாட்டு மக்களுக்கு நல்லது. நல்லவர்கள் வாழ்த்து கூறினால் போதும்


சிவகுமார்
அக் 19, 2025 22:39

தமிழக முதல்வர் பெரியார் வழியைப் பின்பற்றுபவர் அல்லவா. அதனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லக்கூடாது என்று ஒரு கொள்கை வைத்துள்ளார். தமிழக இந்துக்கள் மற்றும் பிற மதத்தவர்களுக்கெல்லாம் இது நன்றாகவே தெரியும்.


Kumar Kumzi
அக் 19, 2025 22:37

ஓங்கோல் துண்டுசீட்டு சுடலை நாளை மெளனவிரதம் யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்


ராமகிருஷ்ணன்
அக் 19, 2025 21:56

இந்துவிரோத கும்பல்கள் தீபாவளிக்கு வாழ்த்துக்கள் சொன்னால் முஸ்லிம், கிறிஸ்தவ ஓட்டுக்கள் கிடைக்காது. தப்பித் தவறி கூட சொல்லிடாதீங்க.


ஆரூர் ரங்
அக் 19, 2025 21:52

முதல்வர் எக்காரணம் கொண்டும் வாழ்த்துக் கூற வேண்டாம். பல நல்லவர்களது நல்ல வாயால் வாழ்த்துக்கள் கிடைத்துவிட்டது. அதுவே போதும்.


krishna
அக் 19, 2025 21:36

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத திமுக வை 2026 முதல் புறக்கணிப்போம். ஜெய்ஹிந்த்


புதிய வீடியோ