உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,- அ.தி.மு.க., வித்தியாசம் இதுதான்: இ.பி.எஸ்.,

தி.மு.க.,- அ.தி.மு.க., வித்தியாசம் இதுதான்: இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே பதவிக்கு வர முடியும். அ.தி.மு.க.,வை பொறுத்தவரையில் யார் விசுவாசமாக உழைக்கிறார்களோ அவர்கள் பதவிக்கு வர முடியும்,'' என அ.தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.சென்னை வானகரத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஜானகி நூற்றாண்டு விழாவில் பழனிசாமி பேசியதாவது: கட்சி துவக்கிய போது எம்.ஜி.ஆர்., சந்தித்த பிரச்னைகளை ஜெயலலிதா சந்தித்தார். தற்போதும் அதேபோன்ற பிரச்னையை சந்தித்து வருகிறோம். அ.தி.மு.க., பிரச்னையை சந்திக்கும் போது எல்லாம் வெற்றியை பெறுவது இயல்பு. கட்சியை அழிக்க நினைக்கிறவர்கள், முடக்க நினைக்கிறவர்களின் எண்ணம் ஈடேறாது.எம்.ஜி.ஆர்., உயிருடன் இருந்தபோது 1980 களில் லோக்சபா தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. எந்த ஒரு கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றதும் கிடையாது. தோல்வி அடைந்ததும் கிடையாது. அனைத்து கட்சிகளும் வெற்றியையும், தோல்வியையும் மாறி மாறி சந்திக்கின்றன. அ.தி.மு.க., தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என்கின்றனர்.தி.மு.க.,10 ஆண்டுகாலம் தொடர் தோல்விகளை சந்திக்கவில்லையா? அப்படி தொடர் தோல்விகளை சந்தித்த கட்சி ஆட்சிக்கு வரவில்லையா? அக்கட்சி 1991 ல் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. 1996 ல் ஆட்சியை பிடிக்கவில்லையா? காலம் மற்றும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்சி மாற்றம் ஏற்படுவது இயல்பு. அ.தி.மு.க., வை பொறுத்தவரை வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்டது.அ.தி.மு.க., தொண்டர்கள் போன்று வேறு எந்த கட்சியிலும் கிடையாது. அ.தி.மு.க., என்பது குடும்பம். குடும்ப கட்சி. தி.மு.க.,வும் குடும்ப கட்சி.அது கருணாநிதியின் குடும்ப கட்சி. அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே அக்கட்சியின் தலைவராக முடியும். ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும். அ.தி.மு.க., பொறுத்தவரையில் யார் விசுவாசமாக இருக்கிறார்களோ, உழைக்கிறார்களா அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஆக வர முடியும். அதுபோல் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் மற்றும் முதல்வர் கூட ஆக முடியும். அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் உள்ள வேறுபாடு இதுதான். அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சியை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தமிழகத்தை அதிக ஆண்டு ஆட்சி செய்த கட்சி அ.தி.மு.க., மட்டுமே. 31 ஆண்டுகாலம் நல்லாட்சி செய்த கட்சி அ.தி.மு.க.,நாம் கோவிலாக நினைக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து சேதப்படுத்திய காட்சியையும் நாம் பார்த்தோம். ஆண்டவன் பார்த்துக்கொள்வான். இன்னும் 15 மாதங்களில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலிதா விட்டுச் சென்ற பணிகளை தொடர நமக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. அது தொடர வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anantharaman Srinivasan
நவ 24, 2024 22:46

சான்ஸ் கிடைச்சா எல்லோருமே வாரிசு அரசியல்தான் செய்வார்கள். எடப்பாடி நீங்க பதவி விலகி அடுத்தவருக்கு வழி விடத்தயாரா..??


Oviya Vijay
நவ 24, 2024 20:46

தமிழகத்தில் பெரும்பாலோரின் எதிர்பார்ப்பு... திமுக, அதிமுக மற்றும் பிஜேபி அல்லாத ஒரு புது கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும். அதற்கு முதலில் மக்கள் மனநிலை மாற வேண்டும்... அதுவரை இப்போதுள்ள சூழ்நிலையில் அதிமுக மற்றும் பிஜேபி ஆட்சியில் வந்து அமர வாய்ப்பேயில்லை... அதுவரை திமுகவே தொடரும்... மக்கள் மனநிலை மாறாத வரையில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை...


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 24, 2024 20:02

நீ தவழ்ந்த பாடியார் மக்கள் முதல்வர் என்று தேர்வு ஆகவில்லை ஸ்டாலின் முதல்வர் என்றே தேர்ந்து எடுக்கப்பட்டவர்


Ramesh Sargam
நவ 24, 2024 19:57

தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே பதவிக்கு வர முடியும். உண்மை. அதிமுகவை பொறுத்தவரையில், யார் குழந்தைபோல தவழ்ந்து சென்று காலடியில் விழுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே முதல்வர் பதவி. இதுவும் உண்மை. ஆக மொத்தத்தில் நேர்மையாக மக்கள் பணியாற்றுபவர்களுக்கு அந்த முதல்வர் பதவி கிடைக்காது. இது தமிழகத்தின் தலையெழுத்து, விதி.


வைகுண்டேஸ்வரன்
நவ 24, 2024 19:03

திமுக வில் கட்சிப் பதவிக்கு யார் வந்தால் உங்களுக்கென்ன அல்லது மக்களுக்குத் தான் என்ன போச்சு? பாமக வில், தேமுதிக வில், தமாகா வில், யாரு தலைவர், வேற யாரும் ஏன் கட்சித் தலைவர் பதவியில் இல்லை?? இந்த கட்சிகள் பற்றி ஏன் ஒப்பிடவில்லை? தேர்தலில் யாரை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பாருங்கள். பாஜக வில் கூட 114 MP சீட்டுகளில் வாரிசுகள் போட்டியிட்டு 76 பேர் வெற்றி பெற்றார்கள். இதில் 28 வாரிசுகள் ஒன்றிய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். அதுக்கென்ன இப்போ? அதிமுக வில் யாரு தலைவர்? முந்தைய தலைவர்களுக்கு வாரிசு இல்லாததால் தான் அதிமுக இப்படி துண்டாடப்பட்டிருக்கிறது. யோசித்துப் பாருங்க. ஜெயலலிதா வுக்கு ஒரு மகனோ, மகளோ இருந்திருந்தால் சசிகலா போயஸ் கார்டன் வீட்டு கேட்டில் கூட நுழைந்திருக்க முடியாது. சசிகலா இல்லைன்னா நீங்கள் சேலம் மாவட்ட இணைச் செயலராகவே இருந்திருப்பீர்கள். அதிமுக ஒரே கட்சியாக உருப்படியா இருந்திருக்கும்.


முருகன்
நவ 24, 2024 18:44

இவருடைய கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் பதவியில் இல்லை என்று நிருபிக்க முடியுமா


Kadaparai Mani
நவ 24, 2024 18:35

DMk is a private limited registered under companies act. All the family members are directors under the act. Aiadmk is the real political party and even a ordinary cadre edapadi palanisamy can become CM and general secretary of the party.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை