உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வில் பூத் வாரியாக வாட்ஸ்ஆப் குழு; வெளியேறுவதால் ஐ.டி., பிரிவு அதிர்ச்சி

தி.மு.க.,வில் பூத் வாரியாக வாட்ஸ்ஆப் குழு; வெளியேறுவதால் ஐ.டி., பிரிவு அதிர்ச்சி

மதுரை : தி.மு.க.,வில் பூத் வாரியாகவாட்ஸ்ஆப்குழுக்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் குழுக்களில் இருந்து பலர் வெளியேறுவதால் வட்ட செயலாளர்கள், ஐ.டி., பிரிவினர் அதிர்ச்சிடைந்துள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி.மு.க., ஐ.டி., பிரிவில் 234 தொகுதிகளிலும் உள்ள பூத் வாரியாக தலா 100 முதல் 150 புதிய உறுப்பினர்களை சேர்த்துவாட்ஸ்ஆப்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு வழியே அரசு நலத்திட்ட உதவிகள் விவரம், கட்சி செயல்பாடுகள், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், அவர் பேசிய வீடியோக்கள் உள்ளிட்டவை பதிவிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தற்போதுவாட்ஸ்ஆப்மூலம் பணம் அனுப்பும் வசதி நடைமுறையில் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் பூத் வாரியாக வாக்காளர்களை 'ஏதாவது ஒரு வழியில்' கவர இதுபோன்ற குழுக்களை ஆளுங்கட்சி ஏற்படுத்தியுள்ளது என விமர்சனமும் எழுந்துள்ளது.இக்குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க அந்தந்த வட்டச் செயலாளர்கள் ஐ.டி., பிரிவினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் வட்டச் செயலாளர்கள் பங்கு ஏனோ தானோ என உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையே வாட்ஸ் அப் குழுவில் சேர்க்கப்பட்ட பலர் அவர்களாகவே வெளியேறுகின்றனர். அவர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குள் வட்டச் செயலாளர்கள், ஐ.டி., பிரிவினர் திண்டாடி வருகின்றனர்.இதுகுறித்து வட்ட செயலாளர்கள் கூறியதாவது: இவ்வகை வாட்ஸ்ஆப் குழுக்களில் உறுப்பினர்களை சேர்க்க அவர்களின் பெயர், அலைபேசி, ஆதார் எண் என முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டியுள்ளது. ஆனால் பலர் தகவல் தர தயங்குகின்றனர். பலர் அவர்களாகவே குழுவில் இருந்து வெளியேறி விடுகின்றனர். அவர்களுக்கு பதில் புதிய நபர்களை சேர்ப்பது சவாலாக உள்ளது. 'ஏசி' அறையில் இருந்துகொண்டு யாரோ சிலர் இதுபோன்ற திட்டங்களை கட்சித் தலைமைக்கு ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் கள நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Jones
ஏப் 17, 2025 22:19

என்னுடைய நெம்பர் குழுவில் சேருங்கள்


N Sasikumar Yadhav
ஏப் 16, 2025 19:56

2026 தேர்தலில் இந்துமத துரோக திருட்டு திமுகவை டெபாசிட் தொகையை வாங்கவிடாமல் தமிழக மக்கள் துரத்தியடிக்க போகிறார்கள்


Suppan
ஏப் 16, 2025 12:38

என்னது. வாட்சாப் குழுவில் சேர்க்க அவர்களின் பெயர், அலைபேசி, ஆதார் எண்...அது சரி ஆதார் எண் எதற்கு தேவை? திமுக என்றால் புருடாதானா?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 16, 2025 11:09

பணம் அதிகமுள்ள கட்சி கையை இறுக மூடிக்கொள்வதால் இந்த நிலைமை.. தேர்தலுக்கு ஒரு மாசம் இருக்கும்போதுதான் கொஞ்சம் அள்ளி விடுவோம்... அதுவரை கிள்ளித்தான் கொடுப்போம் என்று இருப்பதால் இந்த நிலைமை ....


Suppan
ஏப் 16, 2025 16:35

அதுவரை அள்ளித்தான் எடுப்போம் என்றல்லவா எழுதியிருக்கவேண்டும்


Thetamilan
ஏப் 16, 2025 09:01

இந்து மதவாத பாஜ கொள்ளைக்கும்பலின் பண பலம் எடுபடாது


Amsi Ramesh
ஏப் 16, 2025 10:21

உன் கருத்துக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 16, 2025 10:31

இப்படித்தான் சம்பந்தமே இல்லாமல் உளற ஆரம்பித்து விடுகிறார்கள் 200ரு கோபாலபுர கொத்தடிமைகள்....!!?


தஞ்சை மன்னர்
ஏப் 16, 2025 12:48

ஹி ஹி கொஞ்சம் ஹிந்துத்துவ கும்பலின் கருத்துக்களை படித்து பாருங்கள் பை கூடாரமாக ஆகிவிட்டது தெரியும்


SIVA
ஏப் 16, 2025 14:28

இப்படி எல்லாம் கருத்து போட்டால் தான் இரு நூறு கொடுப்பாங்க .....


Venkatesan Srinivasan
ஏப் 17, 2025 09:25

இந்துமத துவேஷம் - அதிவிரோத, திராவிஷ கும்பல் வீழ்ச்சி நிச்சயம். சுத்த இந்து தமிழன் ஒரு போதும் திராவிஷர் இல்லை. திராவிஷர் ஒருபோதும் இந்து - இந்து தமிழர் இல்லை. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே வாழ்க வளர்க பாரதம் இந்திய தேசிய தமிழ் தமிழகம்.


Ragupathi
ஏப் 17, 2025 10:40

₹200 வந்துடுச்சா உபி.


raja
ஏப் 16, 2025 08:05

தமிழர்களின் கோபம் இந்த விடியா திருட்டு மாடல் ஆட்சி நடத்தும் நாடக நடிகன் ஒன்கொள் கொள்ளையன் நுக்கு தெரிய வாய்ப்பில்லை இவர்களை போன்ற பரம்பரை போஸ்டர் ஒட்டும் மற்றும் கட்டுமரம் வால்கெய்...துக்லக் வால்கெய் ...சின்னவன் வால்கெய் என்று கோசம் போடும் கொத்தடிமைகள்லுக்கு தெரிந்து விட்டதால் இந்த விலகல்...


முக்கிய வீடியோ