உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு; விஜய் மீது திமுக போலீசில் புகார்

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு; விஜய் மீது திமுக போலீசில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிதாக தவெக தலைவர் விஜய் மீது திமுக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த, தி.மு.க., ஐ.டி., அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முரளி கிருஷ்ணன் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிதாக தவெக தலைவர் விஜய் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:த.வெ.க., தலைவர் விஜய், கடந்த, 20ம் தேதி, நாகை, திருவாரூரில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து உண்மைக்கு புறம்பாக அவதுாறாகவும், ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார்.இது குறித்து, மணப்பாறை போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் புகாரை ஏற்கவில்லை. எனவே, சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கின்றேன். உரிய விசாரணை நடத்தி, விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kulandai kannan
செப் 30, 2025 10:54

ஒரு கவுன்சிலர்கூட இல்லாத விஜய் பேசுவது அவதூறு இல்லையா?


V K
செப் 29, 2025 22:57

தமிழகத்தில் என்ன இடிஅமீன் ஆட்சியா நடக்குது


Senthil Kumar
செப் 29, 2025 22:28

இருக்கிற பிரச்சனையில் இவனுங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்கானுங்க


கடல் நண்டு
செப் 29, 2025 20:41

ஆக ...இப்போ இது ரொம்ப அவசியம்....ஆக திராவிட மாடல்..


M Ramachandran
செப் 29, 2025 20:18

தீ மூ கா IT விங் இதோடா வேலை மற்ற அரசியல் தலைவர்களை பற்றி தரகுறைவாக பரப்பி கொண்டிருப்பது. குடுத்த காசுக்கு குறைப்பது தான் வேலை.


G Mahalingam
செப் 29, 2025 18:31

தமிழக போலீசார் இப்போது திமுக போலீசார் தான் இருக்கிறார்கள். மே 2026 திமுக ஆட்சி ஒழிந்தவுடன் சரியான நிலைக்கு வந்து விடுவார்கள்.


rama adhavan
செப் 29, 2025 18:01

முன்னரே எதிர்பார்த்தது தான் இத்தகையை புஹார்கள். இது போன்றவை இன்னும் சிறிது வரும்.


Balaa
செப் 29, 2025 16:05

இந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி , சைதை சாதிக் என்ற பேசுறாங்களா. அதுங்க மீது நடவடிக்கை இல்லையா...


RAMESH
செப் 29, 2025 15:03

வெள்ளை காகிதத்தை வெள்ளை அறிக்கை என்று கூறிய ஜூனியர் டிப்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


கல்யாணராமன் சு.
செப் 29, 2025 15:53

போலீஸ் நடவடிக்கை எடுக்கமுடியாதுனு சொல்லிடுவாங்க ...


SUBBU,MADURAI
செப் 29, 2025 14:35

தமிழக காவல்துறையா அல்லது திமுவின் ஏவல் துறையா? தமிழக போலீஸ் திமுக ஆட்சியில் இப்படி கேவலமாக இருப்பது போன்று இதற்கு முன் எந்த ஆட்சியிலும் ஒருபோதும் இப்படி தரம் தாழ்ந்து போனது இல்லை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை