உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசை பாராட்ட திமுகவுக்கு மனமில்லை: சொல்கிறார் இபிஎஸ்

மத்திய அரசை பாராட்ட திமுகவுக்கு மனமில்லை: சொல்கிறார் இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: ''100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. பாராட்ட மனமில்லை'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=03m3w0l6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சேலம் மாவட்டம் எடப்பாடியில் நிருபர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அளித்த பேட்டி: தமிழக வெற்றிக்கழகத்தை கூட்டணிக்கு நயினார் நாகேந்திரன் அழைத்தது பாஜவின் கருத்து. திமுகவிற்கு எதிரான ஒருமித்த கருத்துடைய கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரலாம். அதிமுக ஆட்சியில் இருந்த போது ரூ.5 ஆயிரம் கொடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் என்ன குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

மனமில்லை

100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கை. இதுவரைக்கு நிறைவேற்றி இருக்கிறார்களா? இன்றைய தினம் மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. பாராட்ட மனமில்லை. அது பெயர் மாற்றம் குறித்து நாங்கள் கோரிக்கை வைத்து இருக்கிறோம். பழைய பெயர் தொடர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். பார்லிமென்டில் வாதாட வேண்டியதை, பார்லிமென்டில் வாதாட வேண்டும்.

அதிக கடன்

மாநில அரசுக்கு நிதி பிரச்னை இருப்பதாக கேள்வி எழுப்ப வேண்டும். அவர்கள் பார்லிமென்டில் அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தியாவில் அதிக கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் தான். இது திமுக அரசின் பெரிய சாதனை. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கடன் அதிகரித்து கொண்டிருக்கிறது. தமிழகஅரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பின்னர் தான் கடன் அதிகரித்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

நிருபர்கள் கேள்வியும், இபிஎஸ் பதிலும்!

கேள்வி: ரயில் கட்டணம் உயர்ந்திருக்கிறதே?இபிஎஸ் பதில்: ரயில் கட்டணம் உயரும் என்று அறிவித்திருக்கிறார்கள். இன்றைக்கு விலைவாசி உயர்வு, எரிபொருள் உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை கணக்கிட்டுதான் அவ்வப்போது உயர்த்துவார்கள். ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தி இருப்பதாக சொல்கிறார்கள். இதைக்கூட மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ரயில் கட்டணத்தைக் குறைப்பதற்கு உண்டான நடவடிக்கையை அவர்கள் எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். கேள்வி: தவெகவினர் அவர்களை தூய சக்தி என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதற்கு தார்மீக உரிமை இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?இபிஎஸ் பதில்: அடுத்த கட்சியைப்பற்றி நாங்கள் என்ன சொல்வது. அவர்களின் கருத்தை அவர்கள் சொல்கிறார்கள். அதோடு சரி. அது தூய்மையா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஏற்கெனவே எங்கள் கழக துணைப்பொதுச்செயலாளர் அதற்கு அழகாக விளக்கம் அளித்திருக்கிறார். பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. உங்களுக்குப் புரிந்திருக்கும்.கேள்வி: செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை கிளாம்பாக்கத்தில் விடுவது, மீண்டும் மண்டபத்தில் அடைப்பது என்று அரசு தொடர்ந்து செய்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?இபிஎஸ் பதில்: இவர்களின் தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னார்கள். அரசு சார்பில் ஐந்தரை லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்கள். இதுவரை நிரப்பி இருக்கிறார்களா? கேள்வி: எஸ்.ஐ.ஆர். மூலம் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்களே?இபிஎஸ் பதில்: உண்மையான வாக்காளர் விடுபட்டிருந்தால் அதற்கு 1 மாத காலம் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படவில்லை. திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு இதை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார். இதில் என்ன குறை இருக்கிறது? இது எல்லா கட்சிக்கும் பொதுவானது. உண்மைக்கு மாறாக இருக்கும் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். உண்மையான வாக்காளர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் இதை வரவேற்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Easwar Kamal
டிச 22, 2025 17:38

நீர் அப்பப்ப முழிச்சிகிட்டு ஏதாவது பிணாத்திட்டு போயிரும். சுடலுக்கு நன்றாகவே தெரியும் நீர் அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டா. இப்போது நிலைமையில் edir கட்சி அகக்கூட வாய்ப்பு இல்லை. அதை புரிந்து கொண்டு செயல் படும். கையில் ஒரு அட்சய பத்திரம் இருக்கிறது அதை சிறப்பாக செயல் பட்டால் அமித் udaiviyodu வெற்றி இலக்கை அடையாளம். தோற்றால் கண்டிப்பாக அமித் கோவத்துகு ஆலகாலம் பிறகு சசி நிலைமைதான். கண்டிப்பாக ஜெயில் உறுதி அது எடப்பாடிகும் நன்கு தெரியும்.


Barakat Ali
டிச 22, 2025 13:38

சார்.. திமுக மாண்புமிகுக்கள் தில்லி சுல்தான் மற்றும் அவரது அமைச்சரவையினரை ரகசியமாகச் சந்தித்து தண்டம் செலுத்தி தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்கிறார்கள் .... உங்களுக்கு இது தெரியாதோ ????


sengalipuram
டிச 22, 2025 13:36

நீங்கள் அண்ணாமலையுடன் ஒத்து போகிறீர்களா ? மத்திய அரசை பாராட்டுவது பிறகு யோசிக்கலாம் ..


Haja Kuthubdeen
டிச 22, 2025 14:29

அண்ணாமலை ஒரு பெரிய கட்சியின் ஒரு உறுப்பினர்..முன்னால் தலைவர்.அவர் எதும் கட்சி பொறுப்பில் இருந்தால் அவரிடம் ஆலோசிக்க எதும் இருந்தால் அஇஅதிமுக சார்பில் நிர்வாகிகள் சந்திப்பார்கள்.ஒத்துபோகனும் என்றால் என்ன அர்த்தம்???


SUBBU,MADURAI
டிச 22, 2025 13:31

மத்திய அரசை பாராட்ட மனமில்லை என்று கூறும் இந்த எடப்பாடியார் தமிழகத்தில் தன் கூட்டணி கட்சியான பாஜகவை இன்னும் முழுவதுமாக ஆதரிக்காமல் தள்ளியே வைத்திருக்கிறார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பல இன்னல்களை எதிர் கொண்டு கஷ்டப்பட்டு துவங்கிய அதிமுக என்ற கட்சியை அவருக்கு பின் அக் கட்சிக்கு தலைமையேற்ற ஜெயலலிதா தன் கடின உழைப்பால் பாடுபட்டு வளர்த்த அதிமுக என்ற கட்சியை கரையான் புற்றெடுக்க அதில் கருநாகம் குடி புகுந்தது போல் என்ற பழமொழிக்கேற்ப அதிமுகவை எளிதாக கைப்பற்றியவர்தான் இந்த எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி துவங்கியுள்ள இந்த ஆடு புலி ஆட்டம் கடைசியில் அவருக்கே வினையாக முடியப் போகிறது என்பதுதான் பரிதாபத்துக்கு உரிய விஷயம்.


Kadaparai Mani
டிச 22, 2025 14:06

99 percent of AIADMk is with Edappadi palanisamy. EPS protecting aiadmk from all evil forces including dmk.


பாலாஜி
டிச 22, 2025 13:28

பாராட்டப்படுமளவுக்கு மத்திய அரசு பதவியில் உள்ள பாஜக தமிழ்நாடு அரசுக்கு எதுவும் செய்யாதது உங்களுடைய மூளைக்கு உறைக்கவில்லையா எடப்பாடி பழனிசாமி?


vivek
டிச 22, 2025 13:51

பாலாஜி ...அப்போ திமுக தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது...கொஞ்சம் சொல்லேன்


sengalipuram
டிச 22, 2025 13:21

ஒருமித்த கருத்து உள்ள கட்சியுடன் கூட்டணி.. பின் ஏன் திருப்பரகுன்றம் பிரச்சனைக்கு பி ஜெ பி யுடன் ஒருமித்து குரல் கொடுக்கவில்லை? நவோதய, நீட் போன்ற பிரச்சன்னைக்கு நீங்கள் பி ஜெ பி யுடன் ஒற்று போக்கிற்களா ?


mohana sundaram
டிச 22, 2025 13:19

என்ன பாராட்டி கிழித்து விட்டீர்.


Madras Madra
டிச 22, 2025 12:19

கடன் காண்ட்ராக்ட் கமிசன் கட்டிங் திராவிட மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை