உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி நிர்வாகிகளை மிரட்டி வாகனங்களை எடுத்து சென்ற தி.மு.க., நிர்வாகிகள்: பழனிசாமி

பள்ளி நிர்வாகிகளை மிரட்டி வாகனங்களை எடுத்து சென்ற தி.மு.க., நிர்வாகிகள்: பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டூர் : சேலம் மாவட்டம், மல்லிகுந்தத்தில் நடந்த கட்சி பிரமுகர் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

முன்னதாக, மல்லிகுந்தம் பஸ் ஸ்டாப் அருகே, கட்சி கொடியை ஏற்றி, அவர் பேசியதாவது:

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான் தமிழகம் வளர்ந்து தேசிய அளவில் முதலிடம் பெற்றது.அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 2,160 மாணவ, மாணவியருக்கு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது.சேலம் மாவட்டம் எப்போதுமே அ.தி.மு.க., கோட்டையாக உள்ளது. அதில், எந்த கட்சியினரும் நுழைய முடியாது. அதனால் தான் இளைஞர் அணி மாநாட்டை, இரு முறை தள்ளி வைத்து மூன்றாவது முறையாக நடத்துகிறதுதி.மு.க.,சேலம் மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் பயிர் சாகுபடி செய்வதற்காக மேட்டூர் அணை உபரி நீரை நிரப்பும், 100 ஏரி பாசன திட்டத்தை, தி.மு.க., அரசு கிடப்பில் போட்டு விட்டது.அதுபோல, பள்ளி மாணவர்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட மடிகணினி திட்டத்தையும் முடக்கி விட்டது.தேர்தல் சமயத்தில், 500 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறிய, விடியா அரசு சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது.மேலும், சேலம் தி.மு.க., இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கு அழைத்து செல்வதற்காக, மாவட்டம் முழுதும் பள்ளி, கல்லுாரி நிர்வாகிகளை மிரட்டி பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை எடுத்து சென்று, மாநாட்டில் பங்கேற்க கட்சியினரை, தி.மு.க., நிர்வாகிகள் அழைத்து சென்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.இவ்வாறு பழனிசாமி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ramesh
ஜன 22, 2024 17:26

எம்ஜீஆர் காலத்தில் நான் படிக்கும் போதே பள்ளி வாகனங்களை ஆழும் கட்சி மாநாட்டுக்கு பயன் படுத்தி கொண்டு தான் இருந்தது .மாநாட்டில் சீர் திருத்த தமிழ் எழுத்துக்களை எம்ஜீஆர் கல்வியில் அறிமுக படுத்திய பொது இது தான் நடந்தது


Shankar
ஜன 22, 2024 15:27

திருட்டு திமுக காரனாக இருந்துட்டு இது கூட செய்யலைன்னா எப்படி?


கல்யாணராமன் சு.
ஜன 22, 2024 11:54

திருமண விழாவிலே வந்தோமா, மணமக்களையும், அவங்க குடும்பத்தையும் வாழ்த்தினோமா, மூக்கை பிடிக்க சாப்பிட்டுட்டு போனோமா, வந்ததுக்கு ஏதேனும் பரிசில் (அது இல்லாமே வாழ்க்கையே இல்லியே) கொடுத்தா வாங்கிட்டு போனோமா அப்படின்னு இல்லாமே அரசியல் பேசறதுங்கற கெட்ட பழக்கத்தை ஏற்படுத்திய அத்தனை திருட்டு கட்சிகளுக்கும் கண்டனங்கள் ...... நாகரீகம் இல்லாத காட்டு மிராண்டிகள் .......


Durai Kuppusami
ஜன 22, 2024 11:29

நான் புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைந்தேன்.. இன்றுவரை விசுவாசியாக உள்ளேன்.. அம்மா இருந்திருந்தால்.. ஸ்ரீராம அயோதிக்கு செல்லாமல் இருக்கமாட்டார்.. அனால் இப்போது இருக்கும் அதிமுக தலைவர் போகமாட்டார் ..என்ன பிரச்சினை கழகத்தை அழிக்க பார்க்கிறார். இவரும் வெற்றி பெறமாட்டார் பிஜேபி வெற்றி பெற விடமாட்டார்... திருட்டு கழகம் வெற்றி பெற மறைமுக ஆதரவு செய்கிறார்.. எந்த இந்து பிரச்சினையிலும் தலையிட மாட்டார்.. இந்துக்கள் வாக்கு பறிபோகிறது .. அண்ணாமையை பொறுத்தமட்டில் அவர் நன்றாக செய்கிறார்... நானும் முதன் முதலாக இம்முறை மாறி ஓட்டளிப்பேன்... மிக வருத்தமாக...


Kadaparai Mani
ஜன 22, 2024 13:41

அதிமுக என்றும் தமிழ் நாட்டின் சக்தி வாய்ந்த முதல் இயக்கம் .அதை யாரும் அழிக்க முடியாது .அதிமுக உண்மை மதசார்பற்ற கட்சி .


Ramesh Sargam
ஜன 22, 2024 08:16

'பாம்பின்கால் பாம்பறியும்' என்பதுபோல,


Balu
ஜன 22, 2024 08:10

இதுல என்ன இருக்கு... சமூக நீதிப்படி ஆட்சி நடக்கிறது ..யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி ..


சந்திரன்,போத்தனூர்
ஜன 22, 2024 07:55

உங்க பங்காளி திமுகவை நீங்க இப்படி பட்டும் படாம விமர்சிக்கிறது ரொம்ப தப்புங்க.


RAMAKRISHNAN NATESAN
ஜன 22, 2024 10:58

பயமா இருக்குல்ல ........ கைல விலங்கு போட்டு இஸ்துகினு பூட்டா ????


Kasimani Baskaran
ஜன 22, 2024 05:26

திராவிடம் என்றாலேயே பதவியில் இருக்கும் பொழுது மிரட்டி உருட்டி பணியவைப்பது சாதாரணம் என்பது இவருக்கு தெரியாமல்ப்போனது துரதிஷ்ட வசமானது. முதுகெலும்பில்லாத மண்புழு அதிகாரிகள், மற்றும் பணம் / வேறு லாபம் போன்றவற்றின் மீது சபலப்புத்தியுள்ள அதிகாரிகள் பலர் தீம்காவின் டியூனுக்கு ஏற்றது போல ஆடுவதுதான் அடிப்படை பிரச்சினை.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை