உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சிவாஜியை போல் அமைச்சர் நேருவை தி.மு.க., விரட்டாது

 சிவாஜியை போல் அமைச்சர் நேருவை தி.மு.க., விரட்டாது

கோவை: ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அறிக்கை: திருப்பதி சென்று பெருமாளை வழிபட்டதற்காக, 'திருப்பதி கணேசா திரும்பி போ' என்று, நடிகர் சிவாஜி கணேசனை தி.மு.க.,விலிருந்து விரட்டியடித்தனர். தற்போது தி.மு.க., அமைச்சர் நேரு, திருப்பதியில் அன்னதானம் செய்து, அதை ஒப்புக் கொண்டுள்ளார். சட்டநாதர் கோவிலுக்கு சென்று, ஊழல் வழக்கில் இருந்து, விடு விக்கப்பட பிரார்த்தனை மற்றும் சிறப்பு வழிபாடுகளை செய்துள்ளார். ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது சனாதன ஒழிப்பு கொள்கைகளுக்கு விரோதமாக, வழிபாடு, நேர்த்திக் கடன்களை நேரு செய்து வருகிறார். தலைமைக்கு உரிய பங்கு கொடுப்பதால், சிவாஜி கணேசனை விரட்டி அடித்தது போல, நேருவை விரட்டி அடிக்க மாட்டார்கள். சனாதன ஒழிப்பு கொள்கைகளை விட, வருமானமே முக்கியம். இப்படித்தான், எல்லா விஷயங்களிலும் தி.மு.க., இரட்டை வேடம் போடுறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

joe
நவ 15, 2025 19:47

இந்த நேரு தி மு க எனும் ஊழல் அரசியல் கட்சியின் தூண் . தேச துரோக சொத்துக்களை உருவாக்குவதில் இந்தத் துரோகி கை தேர்ந்தவர் இவருக்கு நிகர் யாரும் இல்லை .ஊழல் அரசியல் வாதிரு. தாங்கள் செய்யும் ஊழலுக்கு தகுந்தவாறு ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை தி மு க எனும் ஊழல் கட்சிக்கு வாரி வழங்கும் ஊழல் அரசியல்வாதிகளில் இவர் யோக்கியராம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை