| ADDED : ஜன 06, 2024 11:14 AM
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, பெத்தநாயக்கன்பாளையத்தில், திமுக இளைஞரணி மாநில மாநாடு கடந்த டிசம்பர் 17ஆம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது அப்போது சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக இந்த மாநாடு தேதி, டிசம்பர் 24ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அப்போது தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், அந்த தேதியில் மாநாடு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு அதை எடுத்து திமுக தலைமை இந்த மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yrccph3j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று திமுக தலைமை வெளியிட்ட உள்ள அறிவிப்பில் வரும் ஜனவரி 21ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, பெத்தநாயக்கன்பாளையத்தில், திமுக இளைஞர் அணி மாநில இரண்டாவது மாநாடு நடைபெறுவதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது. தற்போது அக்கட்சியினர் மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.