உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ‛‛டவுட்

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம்: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ‛‛டவுட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்டூர்: ''மேகதாது அணை குறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது சந்தேகமாக உள்ளது. இது மத்திய அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படும் நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அணை வலது, இடது கரை, 16 கண் மதகு பகுதி, நீர்மின் நிலையங்களை பார்வையிட்ட பிறகு அவர் கூறியதாவது: மேட்டூர் அணைக்கு திறந்துவிடும் நீரை, தமிழக அரசு பயன்படுத்தாமல் வீணாக்குவதாக கர்நாடகா கூறுகிறது. அதேநேரம் தமிழக சாகுபடிக்கு தேவைப்படும்போது மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை தராமல் இழுத்தடிப்பது ஏன் என தெரியவில்லை. தற்போது உபரிநீர் திட்டம் மூலம், 56 ஏரிகள் நிரப்பப்படுகின்றன. விரைவில் இதர ஏரிகளிலும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அத்திக்கடவு - அவினாசி பாசன திட்டத்தை நிறைவேற்ற இடையூறாக உள்ள சிலர் நீதிமன்றத்துக்கு சென்று விடுகின்றனர். அங்கு வழக்கு முடிய பல மாதங்களாகின்றன. அத்திட்டம் விரைவில் முடிந்து தொடங்கி வைக்கப்படும்.மேகதாதுவில் அணை கட்ட நிச்சயம் அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே கர்நாடகா அரசு திட்ட வரைவு தயாரித்து, காவிரி நடுவர் மன்றத்தில் வழங்கியது. ஆனால், காவிரி கீழ்பகுதி அரசின் அனுமதி பெற்றால் மட்டுமே அணை கட்ட முடியும் என்பதால் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவை, காவிரி திட்டத்தில் காவிரி நதி நீரை விடுவிப்பது குறித்து பேசியுள்ளது. மேகதாது அணை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. தற்போது மேகதாது அணை குறித்து, காவிரி நடுவர் மன்றம் பேசுவது சந்தேகமாக உள்ளது. இது மத்திய அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது தமிழகத்துக்கு பாதகமான செயலாக இருக்குமா? என்றால், அதற்கு பதில் ஆம் தான். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

surya krishna
ஆக 04, 2024 08:10

Useless tamilnadu government, they are always blaming central government.


Indhiyan
ஆக 04, 2024 00:50

அது மேகதாது [Megha dhadhu ]இல்லை. மேக்கே தாட்டு [Meke Datu] என்று சொல்லவேண்டும். என்னமோ மேகம், தாது மாதிரி தப்பு தப்பாக எழுதுகிறார்கள். தயவு செய்து சரியாக எழுதவும். கன்னடத்தில் மேக்கே =ஆடு, தாட்டு = தாண்டு. ஆடு கூட தாண்டும் குறுகலான பகுதி


Murugesan
ஆக 04, 2024 00:48

அயோக்கியர்கள் தமிழகத்தை சீரழித்த சுயநல கேவலமான கேடுகெட்ட திமருட்டு முன்னேற்ற கழக தெலுங்கு வந்தேறி திருடனுங்க அமைச்சராக,


venugopal s
ஆக 03, 2024 23:10

டவுட்டே வேண்டாம், அவர்கள் தான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் கேடு கெட்டவர்கள்!


ஜெகதீஸ்வரன் தண்டபானி
ஆக 03, 2024 22:01

துரை முருகன் அவர்களே நீங்கள் சொல்வதை பார்த்தால் கர்நாடக காங்கிரஸ் அரசு டேம் கட்ட வேண்டாம் என்று சொல்வது போலவும் மத்திய அரசு தான் கட்டணும் என்று சொல்வது போலத்தான் உள்ளது இப்படித்தான் திமுக 1970+ களில் இந்திரா காலத்தில் கர்நாடகாவில் மூன்று டேம் கட்ட காங்கிரஸ் உதவியது. அதனால் தான் காங்கிரஸ் இன்னும் கர்நாடகாவில் உயிருடன் உள்ளது. இப்போ மேகதாது அணை கர்நாடக கட்டினால் அதை வைத்து இன்னும் சில ஆண்டுகள் அரசியல் செய்யலாம் என்ற நிலைக்கு திமுக வந்து விட்டது என்று நினைக்கிறேன். திமுகவிற்கு தமிழகத்தின் மீது எப்போதும் அக்கறை இல்லை என்று நினைக்கிறன்.


Abhivadaye
ஆக 03, 2024 21:25

உதட்டிலே உறவு வை, உள்ளத்திலே பகை வை. யாரையும் நம்பாமல்தான் கலைஞர் மற்றும் தளபதி வழியில் அவியல் செய்யனும். புரியுதா?


sankaran
ஆக 03, 2024 21:20

இதுவரை மொத்தம் கர்நாடகாவில் 58 டேம்கள் உள்ளது.. போதாது என்று புதுசா மேகதாது.. அப்புறம் கீகதாது என்று ஒன்னுஒன்னா ஒரு சொட்டு தண்ணி விடாதவரைக்கும் பிரச்சனை பண்ணி கொண்டே இருப்பார்கள்.. இப்போ சோசியல் மீடியா உள்ளதால் திமுகவால் மக்களை ஏமாற்ற முடியவில்லை.. முந்தைய காலங்களில் கர்நாடகாவில் டேம்கள் கட்ட அனுமதி கொடுத்ததே இதே திமுகதான்...தமிழக மக்கள் புரிந்து கொண்டால் சரி..


C.SRIRAM
ஆக 03, 2024 21:02

மனநல சிகிச்சை தேவை இந்த அரசியல் வியாதிக்கு. ஒரே கூட்டணியாம் . மத்திய அரசு மேல் சந்தேகம் . எத்தனை நாள் தான் தமிழக மக்களை ஏமாற்றுவோரோ இந்த வியாதி .


Barakat Ali
ஆக 03, 2024 20:53

அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துட்டாராம் .....


metturaan
ஆக 03, 2024 20:41

கடந்த ஆட்சியில் கிட்டத்தட்ட முடிச்சு கையில் தந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முழுவதும் முடிக்காமல் அரசியல் செய்து காலம் தாழ்த்தி கொண்டிருக்கும் நீங்கள் இதுவும் பேசுவீர்கள் இதற்கு மேலும் பேசுவீர்கள்....


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை